வானிலிருந்து வீழ்ந்த மர்மப் பொருளால் வீட்டில் தீ பரவிய சம்பவம் ஒன்று நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இராகலை மேல் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.30 மணி அளவில் இந்த மர்மப்பொருள் தோட்ட தொழிலாளர் குடியிருப்பொன்றின் கூரையில் வீழ்ந்துள்ளது. விழுந்த கூரையில் சுமார் 7 அங்குல அளவிலான துவாரம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ்விடத்தில் தீ பரவியுள்ளது. தீயை மக்கள் அணைத்துள்ளனர்.
வானிலிருந்து வீழ்ந்த மர்ம பொருளின் பாகங்களை காணக் கூடியதாக இல்லை. கல் ஒன்று கூரையின் மீது விழுவது போல் சத்தம் கேட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர் இராகலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.