இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறுவது உறுதி யாகும்.
மாத்தறை மாவட் டத்தின் அலுவலக த்தை மாத்தறை நகரில் திறந்து வைத்தபோது அமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவி த்தார்.
தேர்தலை மிக அமைதியாக நடத்த வேண்டும். பிரசார நடவடிக்கைகளைப் பொறுமையாகவும், புத்தி சாதுரியமாகவும் மேற்கொள்வது அவசியம் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். யுத்தத்தை முடித்து
சகலருக்கும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஜனாதிபதி உருவாக்கினார்.
இதனை மனித உரிமைகள் கவுன்சில் உணரவேண்டும்.
நெம்பியா, இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய நாட்டுத் தலைவர்கள் ஐ.நா.வில் எமக்கு உச்ச மட்ட ஆதரவைத் தருவதாகக் கூறியுள்ளனர்.
யுத்தத்தின் பின்னரான மீள்கட்டமைப்பு தொடர்பாக அவர்கள் தெளிவாக உள்ளனர்.
முப்பதாண்டு கால யுத்தம் நடைபெற்ற நாட்டில் இவ்வளவு விரிவாக முன்னேற்றம் ஏற்பட்டமை தொடர்பாக நெம்பியாகின் தலைவர் அதிசயப்பட்டார்.
எமது நாட்டில் அபிவிருத்தி பற்றி எமக்குத் தெரிவதில்லை. பிறநாட்டவர்கள் அதனைத் தெரிந்து வைத்துள்ளனர்.
ஐ. தே. க. வுக்கு இத்தேர்தலை வெற்றிகொள்ள முடியாது. இதனால் ஜெனீவாவுக்கு அவர்கள் கோள் சொல்கின்றனர். நாட்டைக் காட்டிக்கொடுக்கின்றனர்.
ஐ.தே.க வில் நல்லவர்களும் உள்ளனர். அவர்கள் நாட்டுக்கும் ஆதரவாளர்கள்.
சிலவேளை இத்தேர்தலில் பின் மாத்தறையில் ஐ. தே. கவில் இருந்து பிரபல்யமானவர்கள் எம். பக்கம் சேர உள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, விஜித் விஜித்தமுனி த சொய்ஸா மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட பலர் பங்குபற்றினர்.