கல்முனையின் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் தரவைக்கோயில் வீதியின் பெயரை மாற்றக்கூடாது எனக்கோரி நாளை கல்முனை தமிழர்களால் அமைதிப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனையில் உள்ள தரவைக்கோயிலிலிருந்து ஆரம்பாகும் இப்பேரணி கல்முனை உப தமிழ் செயலகரிடம் மகஜர் கையளிப்பதுடன் நிறைவு பெறும்.
இதே வேளை மேற்படி வீதியின் பெயரை மாற்றுவது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கல்முனை மேயர் நிசாம் காரியப்பருக்கு கட்டளையிட்டதை கல்முனையின் பெயர் முகவரியற்ற சில பொது அமைப்புக்கள் கண்டித்துள்ளன. உலமா கடசித்தலைவர் முபாறக் மௌலவி தவிர எவருமே இதனை பகிரங்கமாக கண்டிக்க முன்வந்ததாக இதுவரை தெரியவில்லை. அதே போல் ஹக்கீமின் இந்த நிலைப்பாட்டுக்கெதிராக அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட முடியாத கோழைகளாய் முதுகெலும்பற்றவர்களாய் கல்முனை முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும், நிசாம் காரியப்பரின் ஆதரவாளர்களும் உள்ளதாக அரசியல் வானில் பேசப்படுகிறது.