BREAKING NEWS

கல்முனை ஆர்ப்பாட்டம். தவ்ஹீத் ஜமாஅத்தினர் கலந்து கொள்வதை தடுத்த முபாறக் மௌலவி.


ஜனாதிபதிக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி யில் கலந்து கொள்ளும்படி கல்முனை தவ்ஹீத் பள்ளியில் மிம்பரில் வைத்து குத்பாவில் சொல்லப்பட்டது. இதன்படி
தொழுகை முடிந்ததும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு மக்கள் தயாரான போது அந்த இடத்துக்கு சமூகம் தந்த உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி மக்களின் இந்த செயலை கடுமையாக சாடினார். 27 பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட போது, ஹலால் நிறுத்தப்பட்ட போது, அபாயாக்கள் களற்றப்பட்ட போது எந்த ஆர்ப்பாட்;டமம் செய்ய முன்வராதவர்கள் இப்படிச்செய்வதற்கு வெட்கமில்லையா என சத்தமிட்டார்.
ஒருவனின் பதவி ஆசைக்காக சமூகத்தை  காட்டிக்கொடுப்பதற்கு தவ்ஹீத்; ஜமாஅத் துணை போகலாமா? எனவும் கேட்டார். அவரது பேச்சை கேட்டு இந்த உண்மையை  உணர்ந்த தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களில் அனைவரும் கலைந்து சென்றனர். ஆந்த இடத்தில்  பெனர் தூக்கியவர்கள் கூட அதனை சுருட்டிக்கொண்டு நைசாக நழுவி விட்டதை காண முடிந்தது. இன்னும் சிலர் அந்த கொடிகளை எரியுங்கள் என சத்தமிட்டதையும் கேட்கக்கிடைத்தது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar