கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் எமது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்கா விட்டால் கிழக்கில் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று மு.கா.தலைவரான அமைச்சர் ரவுப் ஹக்கீம் எச்சரித்துள்ளார்.
இச்செய்தியை “மவ்பிம” எனும் சிங்களப் பத்திரிகை இன்று ஞாயிற்றுக்கிழமை (16-03-2014) தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.