BREAKING NEWS

ஜனாதிபதி - ஹக்கீம் மோதல் ஒரு நாடகமே!


  • ஜனாதிபதிக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், இவரின் புரிந்துணர்வுடன் நடத்தும் ஊடக நாடகம் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் (உதாரணமாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல்) இந்த ஊடக நாடகம் அரங்கேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் முரண்பாட்டுடன் இருக்கின்றது என்று காண்பித்து முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்வதை தடுப்பது மேற்படி மோதல் நாடகத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இந்த நோக்கத்தை நிறைவேற்ற ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மிகவும் தந்திரமான முறையில் மோதல்களை உருவாக்கி அதனை ஊடகங்களுக்கு வழங்கி வருகிறது எனவும் அரசாங்கத்தின் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் 29 ஆம் திகதி தேர்தல் முடிந்த பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் ஆசனங்கள் ஆளும் கட்சியுடன் இணைக்கப்படும் என அமைச்சர் ஹக்கீம் உறுதியளித்திருப்பதாகவும், இந்த ஊடக நாடகத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தின் உறுப்பினர் சிலரும் அரசாங்கத்தின் அதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிற்கின்றன. 
கொழும்பு நகர மக்களின் வாக்குகளை பெற முடியாது என்பதை அறிந்துள்ள அரசாங்கம் இவ்வாறான தந்திரங்களை பயன்படுத்தி வருகிறது. எப்படியும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் முஸ்லிம் வாக்குகளை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரியவருகிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar