கிழக்கில் முஸ்லிம் அமைச்சர்கள், பலரின் காணிகளை கொள்ளையிட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது என தமிழ்வின் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சில முஸ்லிம் அமைச்சர்கள் ஆயிரக் கணக்கான ஏக்கர் காணியை இவ்வாறு கொள்ளையிட்டுள்ளனர் தமது ஆதரவாளர்கள், உறவினர்கள் போன்றவர்களுக்கு முஸ்லிம் அமைச்சர்கள் காணிகளை சட்டவிரோதமாக வழங்கியுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..
“பாரியளவில் காணி கொள்ளையிடப்பட்டுள்ள போதிலும் பிரதேச செயலாளர்கள் தொடர்ந்தும் அமைதி பேணி வருகின்றனர்.
அரசியல்வாதிகளின் காணி கொள்ளை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு அரச அதிகாரிகளுடன் அரசியல்வாதிகள் பேணி வரும் நட்புறவே காணரமாகும்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு காணிகள் கொள்ளையிடப்பட்டு வருவதாக காணி அமைச்சு அறிவித்துள்ளது” என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.