BREAKING NEWS

டர்பன் பொறிமுறைக்கு இலங்கை இணக்கம்

தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொறிமுறைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டலில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதை இலங்கை அரசு வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

25 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத் தொடரில் உயர்ஸ்தானிகர் நவிபிள்ளை வெளியிட்ட வருடாந்த அறிக்கைக்குப் பின்னரே இலங்கை அரசு இத்தகைய ஒரு அறிக்கையை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டலில் டர்பன் பொறிமுறைகள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதை நாம் வரவேற்கின்றோம். பெண்களுக்கெதிரான வன்முறைகள், சிறுவர் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, சிறுபான்மை உரிமை, பாதுகாப்பான சூழலிற்கு இடப்பெயர்வு போன்ற உலகளாவிய ரீதியில் சிறந்த பொறிமுறைகள் டர்பனில் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

உயர்ஸ்தானிகரின் அறிக்கை மேலும் எமக்கு அழுத்தத்தை தந்துள்ளது. அவருடைய அறிக்கையின்படி வேலைத்திட்டங்களைச் புதிய வரவு  செலவுத் திட்டத்தில் பலவும் நிதி ரீதியான ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் விஷேட வழிமுறைகள் பல குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்க செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கவும் உள்ளக அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்ட ஆணைக்குழு அனுமதியளிக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar