அரசிலிருந்து வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு அரசுக்கு எதிராக செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கச நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது மு.கா.தலைவரான நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் காடமாக கூறியுள்ளார்.
உங்களுக்கு எங்கள் நடவடிக்கைகள்- வேலைத் திட்டங்களுடன் ஒத்துப்போக முடியா விட்டால் நீங்கள் உங்களுடைய ஆட்களை எடுத்துக் கொண்டு அரசில் தாராளமாக வெளியேறலாம்- அதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளிக்க ரவூப் ஹக்கீம்; எங்களுடைய கட்சியிலுள்ள பிரச்சினை எனக்குத்தான் தெரியும். அந்த அழுத்தங்கள் காரணமாகத்தான் நான் முஸ்லிம்கள் தொடர்பாக நவநீதன் பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டி ஏற்பட்டது.
இது விடயத்தில் நான் உங்களைச் சந்திக்கப் பல முறை சந்தர்ப்பம் கேட்டும் அது கிடைகாக நிலையில்தான் இது நடந்தது என்று ஹக்கீம் விளக்கமளித்துக் கொண்டிருக்கையில் குறுக்கிட்ட ஜனாதிபதி;
“நீங்கள் எப்போதும் இப்படித்தான்- உங்களை எனககுத் தெரியாதா? பல கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கூட்டுக்களை அமைத்துக் கொண்டு ஆளும் தரப்பிலும் இருந்து கொள்ள முனைகின்ற ஒருவர்தானே.நீங்கள்! என்னுடன் இந்த விளையாட்டை செய்ய வர வேண்டாம்” என்று ஹக்கீம் மீது ஜனாதிபதி சீறிப் பாய்ந்துள்ளார்.
நீங்கள் வேண்டுமானால் உங்களுடைய ஆட்களை ஆள்ளிக் கொண்டு ஆளும் தரப்பிலிருந்து நீங்கள் வெளியேற முடியும் என்றும் கடும் தொணியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கட்சி, அரசாங்கத்தில் இருக்கின்றதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் படியும் ஜனாதிபதி இதன்போது கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸினால் கொடுக்கப்பட்ட ஓர் ஆவணம் பற்றி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட பல அமைச்சர்கள் கேள்வி எழுப்பிஎதைத் தொடர்ந்தே இந்த முறுகல் இடம்பெற்றுள்ளது.
நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது ஆங்காங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பற்றிய விபரமும் அரசாங்கம் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விடயமும் இந்த 50 பக்க அறிக்கையில் இருந்ததாக மந்திரி சபை கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது.
தாக்குதல்கள் நடந்த இடங்களும் கடந்த வருடம் முஸ்லிம்கள் துரத்தப்பட்ட பகுதிகளும் குறிக்கப்பட்ட படமும் இந்த அறிக்கையில் சேர்கப்பட்டிருந்தது.
நவநீதம்பிள்ளை இந்த ஆவணத்தை தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு கசியவிட்டார் எனவும் அவர்கள் இந்த அறிக்கையுடன் இலங்கையுடன் நட்பாகவுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு சென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் பொழுது அந்த முஸ்லிம் நாடுகளை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் படி பரப்புரை செய்து வருகின்றனர் என ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்தே, கோபமடைந்துள்ள ஜனாதிபதி, அரசாங்கத்தில் மு.கா. இருக்கின்றதா இல்லையா என்பதை தீர்மானிக்கும்படியும் அரசில் இருக்க முடியா விட்டால் தாங்களாகவே அள்ளிக் கட்டிக் கொண்டு அரசில் இருந்து வெளியேறலாம் என்றும் ஜனாதிபதி- அமைச்சர் ஹக்கீமை உறுக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.