BREAKING NEWS

இறப்பர் உற்பத்தி நிறுவன அதிகாரிகளை பிரதியமைச்சர் வியாழக்கிழமை சந்திப்பு



ஹங்வெல்லவில் அமைந்துள்ள இறப்பர் உற்பத்தி தொடர்பிலான நிறுவனத்தையும், அதன் சுற்றுப்புறச் சூழலையும் ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு  அமைப்பாளரும் , முதலீட்டு ஊக்குவிப்பு
பிரதியமைச்சருமான “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபா அண்மையில் சென்று பார்வையிட்டார் .
இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே, பிரதியமைச்சர் அங்கு விஜயம் மேற்கொண்டார். பிரதியமைச்சருடன் அமைச்சு அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
  இக் கழிவு நீரில் விஷம் கலந்திருப்பதாகவும், இதனால் மக்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாகவும் இந்நிறுவனத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்தே, பிரதியமைச்சர் இங்கு விஜயம் மேற்கொண்டதுடன், இதற்குத் தீர்வு பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டார்.
இப்பிரச்சினை குறித்து மேலும் விரிவாக ஆராய்ந்து தீர்வொன்றைப் பெறும் நோக்கில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, இறப்பர் உற்பத்தி நிறுவன அதிகாரிகளுடனும், புகார் தெரிவித்த பொது மக்களுடனும் எதிர்வரும் 6ஆம் திகதி (வியாழக்கிழமை) அமைச்சு அலுவலகத்தில் கலந்துரையாடலொன்றை நடத்தவிருப்பதாகவும், பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

( படங்கள்:- ஐ. ஏ. காதிர் கான்;;; )

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar