BREAKING NEWS

அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டே அரச துணையுடன் செயற்படும் பொதுபலசேனாவை அ. இ. மக்கள் காங்கிரஸ் கண்டிக்கிறதாம்.

(எஸ்.அஷ்ரப்கான்)
ஜாதிக பலசேனா கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியாலாளர் மாநாட்டைபொதுபலசேனா அமைப்பு குழப்பியதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த புதன்கிழமை
 (09-04-2014) இனங்களிடையே புரிந்துணர்வையும் சேர்ந்து வாழ்தலையும் தனதுநோக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜாதிக பல சேனா என்ற அமைப்பினால் கொழும்புகொம்பனித்தெருவிலுள்ள நிப்போன்  ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்மாநாட்டை குழப்பிய 'பொது பல சேனாவின'; அடாவடித்தனமானதும் நேர்மையற்றதுமானசெயற்பாட்டை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அநாகரிகமற்ற ;ந்த நடவடிக்ககையானது ஊடகவியலாளர் மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுவினரின் பேரில்சமூகமளித்திருந்த சட்டத்தின் பாதுகாவலர்களுக்கும் அவர்களது கௌரவத்திற்கும் பங்கம் விளைவிக்கும்விதத்தில் அமைந்திருந்தது.
அக்குழப்பக்காரர்கள் அந்த ஊடகவியலாளர் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களை மிரட்டியதுடன் சட்டத்தையும்ஒழுங்கையும் மதியாது அம் மாநாட்டின்  கைவிடுவதற்கு கட்டாயப்படுத்தியதுடன் மன்னிப்புக்கேட்குமாறும் அவர்களைத் தடுத்து மறித்து பயமுறுத்தி நிர்ப்பந்தித்துள்ளனர்.
எங்கள் தாய்நாட்டின் புனித புத்த மதத்தின் காவலர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுசட்டத்தின் பாதுகாவலர்களை அவமதித்துத் திரியும் இக்குழுவினரை மட்டுப்படுத்தி சட்டத்தையும்ஒழுங்கையும் நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தையும் சட்டத்தின் காவலாளர்களையும் இத்தால்கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த இரண்டு வருடங்களாக தறிகெட்டுத்திரியும் பொது பல சேனா இயக்கம் இந்நாட்டில்சமாதானத்துடன் வாழும் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்து தாக்கிவருகிறதுஇந்த இயக்கத்தின் இக்கொடூர செயற்பாட்டை நிறுத்தத்தவறிய சட்டப்பாதுகாவலர்களின் ஏனோ தானோஎன்ற அசமந்தப் போக்கு பொது பல சேனா உறுப்பினர்களுக்கு தைரியமளித்து ஊடகவியலாளர்கள்முன்னிலையிலும்  தாண்டவமாட வழி செய்துள்ளது.         
இலங்கை வரலாற்றில் முஸ்லிம் சமூகமானது ஒரு தேசப்பற்றுள்ள சமூகமென்று நிரூபித்துள்ளது.ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் பலவந்தமாக அவர்களது பரம்பரை கிராமங்களிலிருந்தும்இருப்பிடங்களிலிருந்தும் இரண்டு மணித்தியாலங்களில் அவர்கள் வாழ்ந்த பிரதேசத்திலிருந்து 1990 ம்ஆண்டு வெளியேற்றப்பட்டதும் மேலும் காத்தான்குடிப்பள்ளி வாயிலிலும் ஏறாவூரிலும்பொலநறுவையிலுள்ள அலிஞ்சிப்பொத்தான கிராமத்திலும் முஸ்லிம்கள் மிக மோசமான முறையில்படுகொலைசெய்யப்பட்;டதும் அவர்கள் டுவுவுநு பயங்கரவாதிகளின் ஈழ நாடு கோரிக்கைக்கு ஆதரவுவழங்காமையும் அவர்கள் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றுமே காரணமாகும்.
இந்த நாட்டில் 2009 ஆம் ஆண்டில் சமாதானம் உதயமானபோது மற்ற சமூகங்களைப் போன்றே முஸ்லிம்சமூகமும் அதன் பலன்களை அனுபவிக்க ஆர்வமாக இருந்ததுமுஸ்லிம் சமூகத்தின் இந்தக் கனவுகள்பொதுபல சேனாவினால் ஏற்படுத்தப்பட்ட  துவேச உணர்வுகளாலும் மனவேதனையாலும் கவலையாலும்தூள் தூளாக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பு அதன் பகிரங்க பிரவேசத்தை தொடர்ந்துஇ பல ஆண்டுகளாக செயல்முறையிலிருந்த ஹலால் உறுதிப்படுத்தும் சான்றிதழை தடை செய்ய வேண்டுமென்ற கோசத்தின் மூலம்ஆரம்பித்தது.  மனித பண்பாடுகளுக்கு ஒவ்வாத வார்த்தைகளால் மிக உயர்ந்த சமய அமைப்பானஜம்மியதுல் உலமா மீது வீசியெறிந்ததுஇந்த நச்சுத்தன்மையானஇழிவான செயலானது இந்நாட்டில்வாழும் முஸ்லிம்களின் மனதை எளிதில் பாதிக்கக்கூடியதாக இருந்ததுமுஸ்லிம் சமூகத்தின் மீதானஇந்த பொதுபல சேனாவின் முடிவில்லாத தாக்கம் பல விதமான முறையில் செயல்படுத்தப்பட்டதுஇதில்ஒன்றுதான் கௌரவமான முஸ்லிம் பெண்களின் ஆடைகளைப் பரிகசிப்பதுபள்ளிவாயில்களைத்தாக்குவதுமுஸ்லிம் வியாபார ஸ்தலங்களைத் தாக்குவது போன்ற செயற்பாடுகளும் மற்றும் அல்குர்ஆன் சட்டப்படி முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கும்  உணவில் துப்புவது போன்றபொய் முடிச்சிகளை அவிழ்த்துவிடுவதுமாகும்.

நீண்ட கால இனங்களுக்கிடையான மோதல் ஒரு முடிவுக்கு வந்ததும் அதை தொடர்ந்து முஸ்லிம்சமூகத்தை குறிவைத்து இவ்வகையான பொய்களை கட்டவிழ்த்து விடுவதும் முஸ்லிம்களுக்கு எதிரானநடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் இதன் பின்ணனியில் உள்ள நோக்கமும் பதில் காண முடியாதகேள்வியாக மாறியுள்ளது.  இந்த நாட்டில் நாம் கஷ்டப்பட்டுப் பெற்ற சமாதானத்தை சீர்குலைப்பதற்காகஒரு மறைமுக சக்தி பின்னணியில் இருக்குமோ என சந்தேகிக்கவும் முடிகிறதுடுவுவுநு அவர்களுடையகாலத்தில் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் மிக இலகுவான முறையில் எந்தக்கேள்வியுமில்லாமல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதைப் போன்று அதற்கு சமமாக இப்போழுதுபொதுபல சேனா செயற்படுகிறது என்பது எல்லோர் மனதிலும் ஒரு கேள்வியாக பதிலைஎதிர்பார்த்திருக்கிறது.

டுவுவுநு இன் அதிகாரம் வட கிழக்கு மாகாணங்களில் மட்டுமே நீடித்திருந்தது.  ஆனால் இங்கு பொதுபலசேனா தங்களது அதிகாரங்களை முழு இலங்கைத் தீவிலுமே செலுத்துகிறதுசில நாட்களுக்கு முன்புபொது பல சேனா வட மாகாணம் சென்று அங்குள்ள அரச அதிகாரிகளையும் பல துன்பங்களுக்கு ஆளாக்கிஅங்கு வாழ்ந்துவரும் முஸ்லிம்களையும் மிகவும் கடுமையாக முறையற்ற வார்த்தைகளால்பழித்திருப்பதும் மிகவும் கௌரவமான மதகுருமார்களுக்கு மட்டுமல்லசாதாரண மக்களுக்கும் ஒவ்வாதஒரு செயலாகும்.
ஆகக்குறைந்தது டுவுவுநு இன் பயங்கரவாத ஆட்சி சட்டத்தை பாதுகாப்போரால் சவாலுக்குஉட்படுத்தப்பட்டுள்ளதுஆனால் பொதுபல சேனாவின் அதிகாரங்கள் சட்டத்துக்கு மேம்பட்டதாகதென்படுகின்றது.
ஆகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சட்டத்தையும் ஒழுங்கையும் எல்லோருக்கும் சமமாகஅமுல்படுத்தும்படியும் யுத்த நிறுத்தத்திற்கு பின்னால் பொதுவாக சிறுபான்மை சமூகத்துக்கும் குறிப்பாகமுஸ்லிம்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளை விசாரிக்க ஒரு ஆணைக்குழுசினை நியமிக்கும்படியும்ஆட்சியில் இருப்பவர்களை கேட்பதுடன் இந்த புதுவருடத்தில் எல்லா சமூகங்களுக்கும் இந்த நாட்டின்சமாதானத்தை பயனுள்ளதாக்கும்படியும் கேட்டுக்கொள்கிறது

ரிஷாட் பதியுதீன் பா..
தலைவர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar