“நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள்.” அல்குர்ஆன்: 5:2
ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பின் யாப்பு
01. பெயர்: ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு
02. முகவரி 49 ஏ. ஜும்ஆ மஸ்ஜித் வீதி, கல்முனை 8, ஸ்ரீலங்கா
03. போன்: 0775449017, பெக்ஸ்: 061222157, ஈமெயில்:
04. நோக்கம்:
1. குர்ஆன் சஹீஹான ஹதீத் மூலம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் முன்னெடுத்துச்செல்லல்.
2. இலங்கையில் உள்ள அனைத்து தவ்ஹீத்வாதிகளையும் ஒற்று மைப்படுத்துதல்.
3. தவ்ஹீத்வாதிகளின் ஒற்றுமையினூடாக அவர்களின் ஜனநாயக சக்தியை வெளிக்காட்டல்
4. தவ்ஹீத்வாதிகளின் ஒற்றுமை மூலம் தவ்ஹீத், மற்றும் தவ்ஹீத் வாதிகளுக்கெதிரான கப்று வணங்கிகளின் சதிகளை முறிய டித்தல்
5. நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி சூறா அடிப்படையில் முடிவெடுத்தல், அந்த முடிவுகளை உறுதியாக நடை முறைப்படுத்தல்.
05. செயற்பாடு
1. தவ்ஹீத்வாதிகளின் ஒற்றுமையின் அவசியம் பற்றி தவ்ஹீத் வாதிகள் மத்தியில் பிரசுரங்கள் வெளியிடல், தனிப்பட்ட சந்திப்புக்கள் என்பன மூலம் தெளிவு படுத்தல்.
2. நாட்டில் உள்ள பிரதான தவ்ஹீத் அமைப்புக்களான அன்சார் சுன்னத்துல் முஹம்மதிய்யா, அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்ப, ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயற்படல்.
3. தம்மை தவ்ஹீத்வாதி என்றோ அல்லது தவ்ஹீத் ஆதரவாளர் என்றோ கருதும் எவரையும் அங்கத்தவராக இணைத்துக் கொள்ளல்.
4. தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை கருத்து மோதல்களாக மாறாத வண்ணம் முயற்சி எடுத்தல்.
5. தவ்ஹீத்வாதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபா டுகளை இனங்கண்டு அவற்றில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்ட மைப்பு தனது கருத்தை எவர் மீதும் திணிக்காமல் செயற்படல்.
6. அம்பாரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தவ்ஹீத்வா திகளினதும் ஒன்று கூடலை 6 மாதங்களுக்கொரு முறை யேனும் நடாத்துதல்.
7. அகில இலங்கை ரீதியலான தவ்ஹீத்வாதிகளை அழைத்து இரண்டு வருடங்களுக்கொரு முறையேனும் தேசிய ரீதியிலான ஒன்று கூடலை நடாத்துதல்.
8. ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு அரசியல் இயக்கமல்ல. ஆனாலும் அரசியல் விடயத்தில் தவ்ஹீத்வாதிகளுக்கான குhஆன், சுன்னா அடிப்படையிலான வழிகாட்டலை நிச்சயம் மேற்கொள்ளும்.
9. தேர்தல் ஒன்று வந்தால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய முன்வரும் கட்சிக்கு அல்லது அமைப்புக்கு ஆதரவளிப்பது அல்லது தனித்துவமாக செயற்படுவது பற்றி கூட்டமைப்பின் சூறா சபை தீர்மாணிக்கும்.
10. சூறா சபையின் எந்த முடிவும் அது குர்ஆன் ஹதீதுக்கு உடன்பட்டதாகவும், முடிந்தளவு நேரடியாக முரண்படாதவதறும் இருக்க வேண்டும்.
11. இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின் போது கப்று வணங்கிகளுக்கோ, கல்முனை கொடியேற்றப்பள்ளிக்கோ காத்தான்குடி அத்வைத ரஊப் மௌலவி, பயில்வான், அக்கரைப்பற்று மக்கத்து வாப்பா போன்றோரை வணங்கு பவர்களுக்கோ அல்லது அவற்றை பகிரங்கமாக ஆதரிப்பவர்களுக்கோ தேர்தலில் வாக்குகள் போடுவதை முற்றாக தவிர்த்தல் மற்றும் தவர்க்க வைத்தல்.
12. பணத்துக்கோ, அரசியல் அதிகாரத்துக்கோ எக்காரணம் கொண்டும் தலைசாய்க்காமல் செயற்படல்.
13. ஏழைகள், அனாதைகள், விதவைகள் விடயத்தில் அதிக அக்கறை செலுத்தல்.
06. நிர்வாகம்:
ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு பின்வரும் நிர்வாகத்தைக் கொண்டிருக்கும்.
1. தேசிய தலைவர்
2. உப தலைவர்கள்
3. செயலாளர்
4. இணைச்செயலாளர்கள்
5. பொருளாளர்
6. தேசிய இணைப்பாளர்
7. பிராந்திய இணைப்பாளர்கள்
8. ஆலோசனை சபை
07. நிர்வாக சபைக்கூட்டம்.
நிர்வாக சபைக்கூட்டம் ஒவ்வொரு 3 மாதங்களுக்கொரு முறை நடைபெறும்.
நிர்வாக தெரிவு:
நிர்வாக தெரிவுக்கூட்டம் 3 வருடங்கொளுக்கொரு முறை நடைபெறும். எவரேனும் நிர்வாக சபை உறுப்பினர் மரணித்தால், அல்லது ராஜினாமா செய்தால் அவரது வெற்றிடத்தை நிரப்ப அவசர நிர்வாக சபைக் கூட்டம் நடத்தப்பட்டு அதில் புதியவர் நியமிக்கப்படுவார்.
08. உறுப்பினராதல்;:
1. குர்ஆன் ஹதீத் மட்டுமே ஒரு முஸ்லிமின் வாழ்க்கை வழிகாட்டி என ஏற்றுக்கொண்ட அனைத்து தவ்ஹீத்வாதிகளும் உறுப்பினராகலாம்.
2. இலங்கையில் உள்ள அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் துக்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், நிர்வாகத்தினர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பின் உறுப்பினராகலாம்.
09. உறுப்பினர் பதவியை இழத்தல்:
1. ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பின் அங்கத்தவர் ஒருவர் பகிரங்கமான இணைவைப்பில் ஈடு பட்டால் உதாரணமாக கல்முனை கொடியேற்ற விழா நடக்கும் போது அதில் கலந்து கொள்ளல், காத்தான்குடி பயில்வான் கூட்டத்தின் கூட்டங்களில் கலந்து கொள்ளல், தெவட்டகஹபள்ளி கபுறடி துஆ போன்ற பகிரங்கமாக இணை வைப்பு நடைபெறும் இடங்களில் கலந்து கொள்ளல் என்பன உறுப்பினர் பதவியை இழக்க வைக்கும்.
2. அதே போல் இத்தகைய இணைவைப்புகளுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகளின் கட்சிகளில் அங்கத்தவராக இருத்தல், கூட்டமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரில் இருவரின் அனுமதிக்கடிதம் இன்றி அத்தகைய வர்களின் தேர்தல் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தல் என்பன உறுப்பினர் பதவியை இழக்கச்செய்யும்.
3. உறுப்பினர் பதவியை இழந்த ஒருவர் மீண்டும் உறுப்பினராக சேர்க்கப்படுவதாயின் நிர்வாகததின் மூன்றில் இரண்டு ஆதரவை பெற வேண்டும்.
10. நிதி:
அங்கத்தவர்களினதும் ஆதரவாளர்களினதும் சதக்காக்களின் மூலம் நிதி திரட்டப்படும்.
நிதிகள் யாவும் வங்கியில் வைப்பிடப்படும்.
பொருளாளர் அவசர தேவைக்காக ஆயிரம் ரூபா மட்டும் கையில் வைத்துக்கொள்ளலாம்.
வங்கியிலிருந்து பணம் பெறுவதற்குரிய காசோலையில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரில் இருவர் ஒப்பமிட வேண்டும்.
