BREAKING NEWS

வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி

!


Hakeem (6)
(அமைச்சின் ஊடகப் பிரிவு)
இறைவன் அருளால் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்கு சமூகப் பொறுப்புணர்வுடன்
ஒத்துழைப்பு நல்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தொரிவித்துக் கொள்வதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
ஹக்கிற்கும் பாத்திலுக்கும் இடையிலான இந்தச் சமரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு உள்ள மக்கள் ஆதரவுத்தளம் அதிகரித்துள்ளமை குறித்தும் அவர் தன்னுடைய பெருமகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாக்காளர்கள் மட்டுமல்லாது இந்த வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்கும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் கட்சிப் போராளிகளுக்கும் விசேடமாக தாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலும் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்தள்ள மக்களுக்கு கட்சி எப்போதும் மதிப்பளித்துச் செயற்படும் என்றும் அவர் கூறினார்.
எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கட்சி தொடர்ந்தும் தனது போராட்டத்தை முன்னெடுத்தச் செல்லும் என்றும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar