மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி அரசாங்கத்திற்காக கடைக்குச் செல்லும் தரப்பினருக்கும் மக்கள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி கோரியது போன்று மக்கள் இம்முறை மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் எனும் மரத்தின் ஆணிவேரை ஆட்டி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போது அனைவரும் ஒன்று சேர்ந்து பொது போராட்டத்தின் மூலம் அந்த மரத்தை வீழ்த்த வேண்டும் என கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதன்பின்னர் வரும் பொதுத் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என கலந்துரையாட முடியுமெனவும் மக்களை ஒன்றுதிரட்டி வீதிக்கு இறங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.