BREAKING NEWS

சமயங்களுக்கு இடையில் செய்திகளை வழங்கும் போது ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்


   
- பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா வேண்டுகோள்
                (ஐ .ஏ. காதிர் கான்)
  சமயங்களுக்கிடையிலான  பிரச்சினைகளை பத்திரிகைகளின் வாயிலாக பிரசுரம் செய்யும் போதுஇ அல்லது வானொலிகள் ஊடாக அறிவிக்கும் போது  மிகவும் அவதானத்துடன் மேற்கொள்ளுமாறுஇ சகல ஊடக நிறுவனங்களையும்இ முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரும் இ ஸ்ரீல. சு .க மத்திய கொழும்பு
 அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா கேட்டுள்ளார்.

  இது தொடர்பாக பிரதி அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : கடந்த காலப் பகுதிக்குள் இனவாதம் மற்றும் இனங்களுக்கிடையில் அபகீர்த்தியை  ஏற்படுத்தும் வகையிலான செய்திகள்இ சில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டும்இ வானொலிகளில் அறிவிக்கப்பட்டும்  வந்தன.

  சமயங்களுக்கிடையில் இனமுறுகல் ஏற்படும் வகையில்  மனக்கசப்புக்களையும் இ பேதங்களையும் உருவாக்குபவர்களின் அறிக்கைகளை  அல்லது செய்திகளை ஊடக நிறுவனங்கள்  மேலும் சோடினை செய்வது அல்லது செய்திகளை திருத்திக் கூறுவதானது இ இவ்வாறான பிரச்சனைகளை மேலும்  அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்பது எனது  கருத்தாகும்.

  இவ்வாறன செய்திகளைஇ ஊடகங்கள் தொடர்ந்தும் பிரசுரித்து அல்லது அறிவித்து வருவதால் இ அவர்களின் இனவாதம் மற்றும் சமயங்களை  அபகீர்த்திக்கு உள்ளாக்கும் முயற்சிகள் மென்மேலும் வலுவடையும் என்பதையும்இ நான் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றேன்.

   இவ்வாறாக தவறான முறையில் செய்திகள் வழங்கப்படுவதுஇ இனங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு பாரிய விளைவு அல்லது விரிசல்கள்  ஏற்படும் என்பதால்இ இதுபோன்ற செய்திகளை இனிமேல் வழங்கும்போதுஇ மிகப்பொறுப்புடனும்  விழிப்புடனும் சகல ஊடகங்களும் நடந்து கொள்ளவேண்டும்.

  இதனால் இ தேசிய ரீதியில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும்  சகஜன்ய வாழ்வும் மேலும் கட்டியெழுப்பப்பட்டுஇ பலம் வாய்ந்ததாக அமையும் என்பதும்இ எனது ஆழ்ந்த நம்பிக்கையாகும்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar