ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியுடன் நேரடியாக பேச முடியும். இதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவிக்க முடியும்” என அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளை நான் ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றேன் என் பிரதி அமைச்சர் காதர் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடு மற்றும் வட மாகாண முஸ்லிகளின் மீள்குடியேற்றம் ஆகிய விடயங்கள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் நெறிப்படுத்தில் 16 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கடிதத்தல் கையொப்பமிட்டுள்ளன. எனினும் பிரதி அமைச்சர் ஏ.ஆர்.ஏ.காதர் இந்த கடிதத்தில் கையொப்பமிடவில்லை.
இது குறித்து அவர் மேலும் கருத்த தெரிவிக்கையில்;
கடிதங்கள் மூலம் ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாகவே குறித்த கடிதத்தில் நான் கையொப்பமிடவில்லை.
கெசினோ சட்டமூல வாக்களிப்பின் போது அரசாங்க தரப்பிலிருந்துகொண்டு ஓடி ஒளிந்தவர்களினால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச முடியாது.
இதன் காரணமாகவே குறித்த பிரச்சினைகளை கடிதம் மூலம் தெரிவிக்கின்றனர். ஆனால் நான் அவ்வாறில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவிக்கக் கூடிய சக்தி என்னிடமுள்ளது. அதனை நான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றேன்” என்றார்.