வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மே தின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால் தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்.
தமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மையே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், உலகு தழுவிய அளவில் தொழி லாளர்களின் இன்றைய உரிமை களை சாத்தியமாக்கியது தொழி லாளர்களுக்கு இடையிலான ஒற்றுமையே என்றும், அத்தகைய ஒற்றுமையையே தற்போது தமிழர்களும் தமது அரசியல் செயற்பாடுகளில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இலங்கைப் போரில் நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை அடுத்து உலகநாடுகளின் கவனம் தமிழர் மீதுள்ள சூழலில் தமிழ்க் கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால், தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார். ஒரு காலத்தில் கேட்பாரின்றி அதிகாரத்தில் இருந்த பிரபாகரனைப் பற்றியும் முதலமைச்சர் இந்த மேதினக் கூட்டத்தில் விமர்சித்தார்.-Thianakaran