இந்நபர் மஹியங்கனை புறநகர்ப் பகுதியில் வீடொன்றில் மறைந்திருப்பதாக மஹியங்கனைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விரைந்த பொலிசார் (7) குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்து அந்நபரைக் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக் குட்படுத்தப்பட்டபோது சட்டவி ரோதமான முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அந்நபர் மகியங்கனை மஜிஸ்திரேட் நீதிபதி கீதானி விஜயசிங்க முன்னி லையில் ஆஜர் செய்யப்பட்டார்.
நீதிபதி அந்நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நபர். மாத்தறைப் பகுதியின் கொடகம என்ற இடத்தைச் சேர்ந்த ஏ. பி. அத்தபத்து என்பவராவார்.
மகியங்கனைப் பொலிசார் சட்டவிரோத குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றத்தில் பலமுறை ஆஜரா காமையினால் குறிப்பிட்ட நபருக்கு பிடி விறாந்து பிறப்பிக்கப்பட் டிருந் ததாகவும் பொலிசார் கூறினர்.