BREAKING NEWS

இடி, மின்னல் தாக்கம் அவதானமாக இருக்க வேண்டுகோள்

மத்திய மலையகப் பகுதிகளில் இடியு டன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் எனவும் பொது மக்கள் இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதியில் இடியுடன் கூடிய மழைபெய்யும் போது பலத்த காற்றும் வீசும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
அதேவேளை நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங் களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் மாலையில் ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar