அளுத்கம, தர்காநகர், பேருவளை போன்ற பிரதேசங்களில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களனி;
உள்ளங்களில் ஏற்பட்ட காயங்கள் இன்னுமே ஆறாத நிலையில் அவர்களின் துயரத்தில் நாமும் இப் பெருநாளில் பங்கு கொள்வதோடு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இவர்களின் உள்ளங்ளகில் ஏற்பட்டுள்ள புண்பட்ட காயங்கள் மறைந்து, இவர்களது வாழ்வில் மீண்டும் மறுமலர்ச்சி பெற வேண்டுமென துஆப் பிரார்த்தனை புரிவோமாக.இவ்வாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மத்திய தொகுதி அமைப்பாளரும், முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று பெருநாளைக் கொண்டாடுகின்றோம். என்று இருந்துவிடாமல் ஒரு மாதகாலமாக ரமழான் நமக்குத் தந்த பயிற்சிகளையும் பாடங்களையும் ஏனைய மாதங்களிலும் முறையாகக் கடைப்பிடிக்க முன்வர வேண்டும். இன்று பல்வேறு இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகியிருக்கும் நமது முஸ்லிம் சகோதரர்களுக்காகவும், குறிப்பாக சமீபத்திய வன்செயல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின்துயர் துடைத்து, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதுமே இன்றைய பெருநாளை நாம் கொண்டாடுவதன்
பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.
புனித ரமழானில் ஏழைகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எவ்வாறு உதவி உபகாரங்களை புரிந்தோமோ அதே ஒத்துழைப்புகளை ஏனைய மாதங்களிலும் வழங்குவதே நாம் செய்யும் பெரிய புண்ணியமாகும்.
அது மாத்திரமின்றி கல்வியைத் தொடர முடியாமல் உள்ள மாணவ, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளிலும் அக்கறை செலுத்தி அவர்களுக்குத் தேவையான சகல பாடசாலை வளங்களையும் பெற்றுக் கொடுப்பதும் இன்றைய நோன்புப் பெருநாளில் நாம் மேற்கொள்ளும் மிகப் பெரிய கைங்காரியமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ரமழான் மாதத்தில் நாம் செய்த நல் அமல்களை இந்நாளில் ஏற்றுக்n காண்டு தொடர்ந்து வரும் காலங்களில் டிதனை செவ்வனே செய்வதற்கு நல்லருள் பாளிப்பானாக.
ஆமீன் . . . (ஈத் முபாறக்)
(ஐ.ஏ.காதிர் கான்)

Post a Comment