BREAKING NEWS

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி திட்டமிட்டபடி 18 இல் தோண்டப்படும்


மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகுமென களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கிவந்த 168 முஸ்லிம்களை கடந்த 12.7.1990ம் ஆண்டு குருக்கள்மடம் பிரதான வீதியில் வைத்து விடுதலைப் புலிகள் கடத்தி படுகொலை செய்த பின்னர் குருக்கள் மடம் கடற்கரையோரத்தில் புதைத்துள்ளதாக அவர்களது உறவினர்களில் 66 பேர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சடலங்களின் எச்சங்களையாவது ஒப்படைக்குமாறு உறவினர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டை யடுத்து களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ. எம். றியாழ் குறித்த புதைகுழிகளை தோண்டுமாறு உத்தரவிட்டிருந்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar