BREAKING NEWS

ஆஹா! தேர்தல் வந்தபின் எட்டிப்பார்க்கிறார்கள். ஊவா மாகாண வீதி உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.43இ500 மில்லியன் நிதி


21 பாலங்கள் அடங்கலாக 53 திட்டங்கள் முன்னெடுப்பு
ஊவா மாகாணத்தின் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 43,500 மில்லியன் ரூபா செலவில் 21 பாலங்கள் அடங்கலாக 53 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாணங்களையும் மாவட்டங்க ளையும் கிராமங்களையும் இணைக் கும் வகையில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள்
இடம்பெறுவதாக ஊவா மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைப் பணிப்பாளர் ஏ. எல். எம். நிஸார் தெரிவித்தார்.
மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களை இணைக்கும் வகையில் 60.31 கிலோ மீற்றர் தூர வீதி மீளமைக்கப்பட்டு வருகிறது இதற்கென 4,605 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
இதுவரை 40 வீதமான பணிகள் நிறைவடைந்தி ருப்பதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.
பிபில - பிடகும்புர, நாமல் ஓயா - இகினியாகல இடையில் அமைக்கப்படும் இந்த காபட் வீதி அம்பாறைக்கான பயண நேரத்தை பல மணி நேரத்தினால் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரடுமுரடான 8 அடி வீதியாக காணப்பட்ட இப்பாதை துரிதமாக மீளமைக்கப்படுகிறது.
இது தவிர பதுளை - கரமெடியா அதாஉல்பத வீதி 3,370 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. 47.98 கிலோ மீற்றர் தூர பாதையின்
90 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளன. மஹியங்கனை - திம்புலாகல - தலக்கன இடையிலான 24/10 கிலோ மீற்றர் வீதி பணிகள் பூர்த்தியாகியுள்ளதோடு மஹியங்கன - திம்புலாகல - தலுக்கன வீதி 5020 மில்லியன் செலவில் துரிதமாக நிர்மாணிக்கப்படுகிறது. இதன் 85 வீத பணிகள் நிறவைடைந்துள்ளன.
கண்டி - மஹியங்கனை - பதியதலாவ இடையிலான 9.13 கிலோ மீற்றர் தூர வீதியும் கண்டி - மஹியங்கன - பதியதலாவ இடையிலான 20.50 கிலோ மீற்றர் வீதியும் பூர்த்தியடைந்துள்ளன. நுவரெலிய - பதுளை இடையில் 5,942.70 மில்லியன் செலவில் 54.80 கிலோ மீற்றர் தூ ர வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வீதி அபிவிருத்தியுடன் 9 பாலங்களும் நிர்மாணிக்கப்படுகின்றன.
கிராமங்களை இணைக்கும் வகையில் 12 பாலங்களை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் அநேகமான வீதி அபிவிருத்தி பணிகள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar