இந்த புதைகுழியை 18.8.2014 திகதி திங்கட்கிழமை தோண்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ்இ ஜூலை 01 ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
சட்ட வைத்திய நிபுனர்கள் வரவில்லை என்பதை களுவாஞ்சிகுடி
பொலிஸார்இ நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதனையடுத்தே நீதவான்இ புதைகுழி தோண்டும் நடவடிக்கையை நவம்பர் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதன் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்திற்கு காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இணைப்பாளர் டி.ஆர்.ஹெலி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான றஊப் ஏ மஜீத், எம்.எம்.அலிசப்ரி, எச்.எம்.எம்.பாக்கீர் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
1990 ஆம் ஆண்டு காத்தான்குடியைச் சேர்ந்த சிலர் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தை ஜூலை மாதம் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ்இ ஜூன் 23 ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எனினும்இ புதைகுழியை தோண்டுவதற்குரிய ஏற்பாடுகள் இல்லாததாலும் சட்டவைத்திய நிபுணர் கொழும்பிலிருந்து உரிய இடத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்பதாலும் தோண்டுவற்குரிய உபகரணங்கள் மற்றும் ஆட்கள் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதால் அதற்கு கால அவகாசம் தருமாறு கோரி களுவாஞ்சிகுடி பொலிஸார் நீதிமன்றத்தில் ஜூலை மாதம் 1 ஆம் திகதி அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி ஏ.எம்.றியாழ் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதியன்று உரிய புதைகுழியை தோண்டு வதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அன்று உத்தரவிட்டிருந்தமை குறி;ப்பிடத்தக்கது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்திற்கு சமூகமளித்த காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இணைப்பாளர் டி.ஆர்.ஹெலி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான றஊப் ஏ மஜீத், எம்.எம்.அலிசப்ரி, எச்.எம்.எம்.பாக்கீர் ஆகியோர் இதன் குருக்கள் மடம் புதை குழியையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
காத்தான்குடியைச்சோர்ந்நத 168 முஸ்லிம்களின்; கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கட்டுள்ளதாகவும் இதனை தோண்டி இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உதவுமாறு கேட்டு காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் சிறலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு அமைப்பாளருமான றஊப் ஏ மஜீத் மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் உள்ளிட்ட 64 பேர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதே போன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் இந்த ஜனாசாக்களை தோண்டி ஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யுமாறு கேட்டு காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை வழங்கியிருந்தார்.
அந்த கடிதத்தினை 25.3.2014 அன்று காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம கையொப்பமிட்டு பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment