முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் நேற்றிரவு காத்தான்குடியில் நடந்த கட்சியின் எழுச்சிக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார்.
இந்நிகிழ்வுகளில் அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள், சில பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தலைவர் காத்தான்குடிக்கு வருவதை அறிந்த உள்ளுர் அதிகார தலைவர்கள் சிலர் தலைவரிடம் எப்படியாவது முகத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக அங்கு சென்று தமது அதீத கட்சிப் பற்றைக்காட்டியுள்ளனர். சிலர் நமக்குத் தேவையா இந்தக் கூட்டம் என்று வேண்டா வெறுப்புடன் இருந்து்ள்ளனர். சிலர் இன்னும் சிலருடன் ஒட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.
அமைச்சர் ஹக்கீம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவுருக்கும், காத்தான்குடிக்கும்தான் அடிக்கடி விஜயம் செய்வார். கல்குடாவின் ஓட்டமாவடிக்கு செல்வதில்லையாம். இதற்குக் காரணம் அமைச்சர் பசீர் சேகுதாவுதாம்.
கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் செல்வாக்குள்ள தலைமைகள் உருவாகக் கூடாது என்ற நிலைப்பாட்டில் அமைச்சர் பசீர் இரு்ப்பதால்தான் கடந்த வருடம் ஓட்டமாவடியில் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் மொஹிதீன் அப்துல் காதர் நினைவு தின நிகழ்வுக்கு கடைசி நேரத்தில் அமைச்சர் ஹக்கீம் வருகை தரவில்லை.
பாருங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை ஆரம்பத்தில் அர்ப்பணித்த ஒருவரின் அனுதாபக் கூட்டத்தையே தடுத்த பெருமை பசீரையும், அதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்த பெருமை ஹக்கீமையும் சாரும்.
நண்பர் ஒருவர் சொன்னார் அமைச்சர் ஹக்கீம் ஓட்டமாவடிக்கு கடைசியாக வந்து விட்டுப்போய் சுமார் இரண்டைரை வருடங்களாம்.முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்திய அமைச்சுப் பதவியும், மாகாண அமைச்சுப் பதவியும் இருக்கின்ற நிலையில் கல்குடாவைச் சேர்ந்த எவருக்கும் ஒரு பதவியும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment