BREAKING NEWS

தற்செயலாகத்தான் பொது பல சேனாவை சந்தித்தார்களாம். ஹஜ் முகவர்கள் சமாளிப்பு

-அஸ்ரப் ஏ சமத்-
செரண்டிப் ஹஜ்முகவர்கள் பொதுபலசேனாவைச் சந்தித்து ஹஜ் சம்பந்தமாக முறையிட்டதாக ஊடகங்களில் தவறான செய்தி  வெளிவந்துள்ளது. அச் செய்தி பற்றிய உண்மையான நி
லவரத்தை விளக்கி – செரண்டிப் ஹஜ் முகவர்  என்.எம் ரவல்ஸ் முஹம்மத்  அனுப்பியுள்ள ஊடகச் செய்தி –
இன்று காலை நாங்கள் ராஜகிரிய பள்ளிவசால் அருகில் எனது வாகனத்தை நிறுத்திவிட்டு எனது சக நண்பர்களுடன் நிற்கும்போதே தற்செயலாகவே பொதுபலசேனாவின் பணிப்பாளர் நிலந்தபெரேராவைச் சந்தித்தோம்.
அவரே உங்களது ஹஜ் விடயமாக நீங்கள் பேசியதை ஹிரு தொலைக்கட்சி ஊடக கண்டேன். என விணாவினர். அப்போதே அவர் ஹஜ் விவகாரங்கள் அமைச்சர் பௌசியின் ஹஜ் முறைகேடுகள்  அதன் பின்னர் நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் அதனையும் மீறி அமைச்சர் பௌசி செயற்பட்டதையும் அவரிடம் கூறினோம்.
இவ் விடயம் புதிய விடயமல்ல  ஹஜ் பற்றிய  செய்திகள் ஏற்கனவே சகல ஊடகங்களில் வெளிவந்த செய்தி இச் செய்தியை நாங்கள் ஒருபோதும் பொதுபலசேனாவிடம் சென்று வேண்டுமென்டு சொல்லவில்லை.
திலந்த – இந்தப் பிரச்சினையை  நீங்கள் ஏன் உலமா சபையிடமோ முஸ்லீம்; அரசியல் தலைவர்களிடம்  தெரியப்படுத்தவில்லையா எனக் கேட்டார்?
நாங்கள் சொன்னோம் பல தடைவ சொல்லியும் எவ்வித பலனும் கிடைக்க வில்லை. கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்றம் ஊடகாவே தீர்வைப் பெற்றுக் கொடுக்க முயற்சித்து வருகின்றோம்.
இம்முறை வழங்கிய தீhப்பையும் உதாசீனம் செய்ததால்  நீதிமன்றம் தற்பொழுது விடுமுறையில் உள்ளது மீள 25ஆம் திகதி  திறக்கப்பட்டதும் நாங்கள் உயர் நீதிமன்றில்  வழக்கை தாக்கல் செய்ய உள்ளோம். என திலந்தவுடன் தெரிவித்தோம்.
திலந்த – இவ்விடயம் உங்களது உள்விடயம். இதில் நாங்கள் தலையிடமாட்டோம். ஆனால் ஹஜ் விடயம் பற்றி நடைபெறும் நிலவரங்களை விரிவாக கேட்டறிந்து கொண்டார். இதனையே அவரும் சில வெப்தளங்களுக்கு சொல்லியிருக்கின்றார். இதுவே உண்மை.
நாங்கள் ஒருபோதும் எங்களது சுயஇலாபத்திற்காக எமது மதத்தையும் முஸ்லீம சமுகத்தையும் காட்டிக்கொடுக்கவில்லை. ஆனால் சோசியல் மீடியாக்கலிலும் என கைத்தொலைபேசியிலும் நான் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானதேரரைச் சந்தித்தாகவும் ஹஜ் விவகாரம்பற்றி அவர்களை தலையிடச் சொன்னதகாவும் முஸ்லீம்களை காட்டிக் கொடுத்தாகவும் விசமத்தனமான செய்திகளை அமைச்சர் பௌசியின் ஆட்கள் பரப்பி வருகின்றனர்.
நான் இந்த நாட்டின் வாழும் முஸ்லீம் சமுகத்தின் கல்வி, சமுக சேவைகளில் பண்நெடுங்காலமாக ஈடுபடுகினறேன. ஏதிர்காலத்தின் எனது சமுகசேவை வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்நெடுத்துச செல்கின்றேன்.
நான் ஒருபோதும் எனது சுயஇலாபத்திற்காக ஹஜ் விவகாரங்கள் பற்றி பேசவில்லை. நீதிக்கும் நியாயத்துக்கும் இந்த நாட்டின் சட்டம் ஓழுங்கு ஒன்று இருக்கின்றதே அதில் இருந்து அநீதி இழைக்கும் அரசியல்வாதிகளுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கே நான் முயற்சித்தேன்.
ஆனால் நாங்கள் கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து ஹஜ்; கோட்டா விடயத்தில் தொடர்ந்தும் பௌசி அமைச்சரினால் பாதிக்கப்பட்டு வருகின்றோம். 2005ஆம் ;ஆண்டு 500பேரை அனுப்பிய எனது ஹஜ் முகவர் இந்த ஆண்டு ஹஜ் கோட்டா 10மட்டும் வழங்கப்பட்டது.
அதேபோன்று மற்றைய பாதிக்கப்பட்ட 9 முகவர்களும் சேர்ந்து அமைச்சர் பௌசியின் அநீதிக்காக  போரர்டுகின்றோம். கடந்த மாத உயர் நீதிமன்ற தீர்ப்பின்போது 20 முகவர்கள் பாதிக்கப்பட்டார்கள் 70 முகவர்கள் நீதி கிடைத்தது.
மீண்டும் அமைச்சர் பௌசியின் அடியாட்களான 20 முகவர்கள் சந்தோசமடைந்துள்ளனர். 70 பேர் பாதிக்கப்பட்டு இத் தொழிலைச் செய்வதா இல்லையா? என  பாதிக்;கப்பட்டுள்ளோம. ஆனால் நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்ப் போவதில்லை. தொடர்ந்து நீதிக்காக போராடுவோம்.
உயர் மன்றத் தீர்ப்பு கிடைத்தும் அதனையும் அமைச்சர் பௌசி அவர்கள் உதாசீனம் செய்துள்ளார். அவரது சகல அரசியல் பலத்தையும் இலங்கையிலும் ஜித்தாவிலும் பாவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஊடாக பல பிரயத்தணங்களை பாவித்து அமைச்சர் பௌசி  முஸ்லீம் சமய பணிப்பாளரை அழைத்து மீண்டும் ஹஜ் கோட்டா வழங்கப்பட்டது.
அக் கோட்டாவில் பௌசியின் கையெழுத்துடன்  அவர் வழங்கிய பழைய  ஹஜ் பட்டியல் படி கோட்டா வழங்கப்பட்டது.  அதேபோன்று பௌத்த சாசன அமைச்சின் செயலாளருக்கும் ஆழுத்தம் கொடுக்கப்பட்டது.  இந்த விவகாரத்தில் தலையிடவேண்டாம் என சொல்லியிருந்தார்.
அதே போன்று அட்டேனி ஜெனரல் ஊடாக அமைச்சர் பௌசியின் பட்டியலை அனுமதிக்கும் படியும் பௌத்த சாசன அமைச்சின் செயலாளரின் பட்டியலை வாபஸ் பெறச்சொல்லியும் வெளிநாட்டு அமைச்சின்  ஊடகா அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர் பௌசியின்  பட்டியலுக்கான சகல அரச அழுத்தங்களையும் பாவிக்கபட்டே  மீள கோட்டாவும் வழங்கப்பட்டது.
ஆனால் எங்களுக்கு உயர் நிதிமன்றம் பெற்றுத் தந்த தீர்ப்பு என்னவாயிற்று?

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar