BREAKING NEWS

புள்ளி விபரங்களை காட்டி விவாதித்தாலும் ஊவாவில் அரசுக்கே அமோக வெற்றி -ஜனாதிபதி


புள்ளி விபரங்களைக் காட்டி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அரசாங்கம் ஊவாவில் அமோக வெற்றிபெற்றுள்ளது என்பது உறுதி என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையின் வரலாற்றில் பாராளு மன்றத்திலிருந்து மாகாண சபைக்கு வந்து தோல்வியைத் தழுவிய முதல் சந்தர்ப்பம் இது என தெரிவித்த ஜனாதிபதி; தோல்வியடைந்தவர்கள் தாம் வெற்றியடைந்ததாக மக்களை ஏமாற்ற நினைப்பதும் விந்தையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் அத்தனை தேர்தல்களிலும் வெற்றிபெற முடியும் என உறுதியாகத் தெரிவித்தார். ஊவா மாகாண தேர்தலில் வெற்றிபெற்ற முதலமைச்சர் சiந்ர ராஜபக்ஷ உட்பட மாகாண சபை உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் ஊவா முதலமைச்சர் உட்பட ஐ. ம. சு. முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமானம் செய்துகொண்டனர். பிரதமர் டி. எம். ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:
ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய முதலமைச்சர் சiந்ர ராஜபக்ஷ உட்பட வெற்றிபெற்ற அனைவரையும் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
ஊவா மாகாண சபைத் தேர்தலோடு நாம் நாட்டில் அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை நடத்தி முடித்துள்ளோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். இதில் வட மாகாண சபையைத் தவிர ஏனைய அனைத்து மாகாண சபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளது.
இக்காலங்களில் இணையத்தளங்களை நோக்குகின்றபோது எனக்கே சந்தேகம் வருகிறது. நாம் வெற்றிபெற்றுள்ளோமா இல்லையா என்று. ஏனென்றால் பிரசாரங்களும் ஊடகங்களில் கட்டுரைகளும் ஏதோ எதிர்க் கட்சி வெற்றிபெற்று விட்டதாகவே வெளிவருகின்றன.
மக்கள் மத்தியில் இவ்வாறான கருத்துக்களே முன்வைக்கப்படுகின்றன. ஏதேதோ புள்ளி விபரங்களைக் காட்டி “நாமே வென்றோம்” என்றே எதிர்க் கட்சியான ஐ. தே. க. பிரசாரங்களை முன்வைக்கின்றது.
சில ஊடகங்களில் வெளிவரும் கட்டுரைகளும் ஐ. தே. க அமோக வெற்றியைப் பெற்றுவிட்டதாகவே உள்ளன. அவர்களது இத்தகைய திற மைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். தோல்வியடைந்தாலும் நாம் வெற்றி பெற்றவர்களே’ என சொல்வதற்கு நாமும் இதைப்பழக வேண்டியுள்ளது. அதேபோன்று வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தவர் போன்று இருக்கவும் பழக வேண்டியுள்ளது.
நாம் நேர்மையானவர்களாக மக்களுடன் வாழவேண்டும் என்பதையே நான் கூறவிரும்புகிறேன். எதையாவது கூறி ஏமாறுபவர்களல்ல எமது மக்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். யார் எதைச் சொன்னாலும் இது எமக்கு கிடைத்த அமோக வெற்றியாகும். வரலாற்றை பார்க்கும்போது விருப்பு வாக்கு தொடர்பாகப் பேசப்படுகிறது. ஒரு இலட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகளைப் பெற்ற நடிகர் ஒருவரை நான் பார்த்திருக்கிறேன். சப்ரகமுவவில் இன்னும் இலட்சக்கணக்கில் விருப்பு வாக்குகள் பெற்ற பலரைப் பார்த்திருக்கிறோம். இதுபோன்றவற்றைப் பட்டியலிட்டுக் கூறமுடியும்.
சாதாரணமாக பாராளுமன்றத்திலிருந்து விலகி மாகாண சபைக்குப் போட்டியிட்ட பலரையும் பல சந்தர்ப்பங்களையும் கூற முடியும். அமைச்சர்கள் அமரசிறி தொடங்கொட, நாவின்ன போன்றோர் அண்மையில் எம்முடன் இணைந்த தயாசிறி ஜயசேகர போன்றோரைக் குறிப்பிட முடியும்.
எனினும் இவ்வாறு எதிர்க் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு வந்தோ அல்லது எதிர்க் கட்சியிலோ அவ்வாறு வந்தவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள்.
இது முதலாவது சந்தர்ப்பம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாகாண சபைக்கு வந்து போட்டியிட்டு தோல்வியுற்ற முதலாவது சந்தர்ப்பம் ஊவாவில் தான் இடம்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட உறுப்பினரை இழிவுபடுத்துவதற்காக நான் கூறவில்லை. எனினும் அவரை இத்தகைய நிலைக்கு எதிர்க் கட்சி ஆளாக்கியுள்ளது என்பதைத் தான் குறிப்பிட விரும்புகின்றேன்.
இன்று மாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஏனைய அமைச்சர்கள் பின்னர் சத்தியப்பிரமாணம் எடுக்கவுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாடு திரும்பியதும் அது நடைபெறும்.
நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றபோது ஊவாவில் மொனராகலை மாவட்டம்தான் மிகவும் பின்தங்கிய வறுமை நிலையிலிருந்த மாவட்டமாக இருந்தது. இன்று அந்தநிலை மாற்றம் பெற்றுள்ளது. வறுமையை இல்லாதொழிக்க எம்மால் முடிந்துள்ளது. அதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டோம்.
24 மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடங்களை அந்த மாவட்டத்துக்கு நாம்பெற்றுக்கொடுத்துள்ளோம். கல்வியைப் பொறுத்தவரை வடக்கைத் தவிர அதற்கடுத்ததாக ஊவா மாகாணம் பெறுபேறுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதுபோன்று அனைத்துத் துறைகளிலும் நாம் வெற்றி கண்டுள்ளோம்.
எனினும் மக்கள் இதையும் விட வேறொன்றை எதிர் பார்க்கின்றனர். சேவை செய்வது மட்டுமன்றி மக்கள் பிரதிநிதிகள் மக்களோடு நெருங்கி செயற்படுவதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். பாதைகள், குளங்கள், 100 ற்கு 100 மின்சாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள போதும். மக்கள் மனதை வெல்லும் வகையில் பிரதிநிதிகள் செயற்படாவிட்டால் அது தேர்தலில் வெளிப்படும்.
இதனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன. அரசியல்வாதிகளின் செயற்பாடுகளையும் மக்கள் அவதானிக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வதே எமது நோக்கமாக வேண்டும். தகுதியற்ற மற்றும் மக்கள் நம்பிக்கையை இழக்கின்ற விதத்தில் உங்கள் நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது. இதனைக் கவனத்திற்கொண்டு செயற்படுவீர்களென்று நான் நம்புகிறேன்.
இத்தகைய செயற்பாடுகள் இறுதியில் கட்சிக்கும் எமக்குமே. பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறக்கக் கூடாது. நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்றுள்Zர்கள். ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்படுங்கள் என்பதையே நான் வலியுறுத்துகின்றேன்.
இப்போது விருப்பு வாக்குப் போட்டி முடிந்து விட்டது. ஒருவர் ஒருவர் அதற்காக மோதிக்கொண்டது முடிந்துள்ளது. எதிர்க் கட்சிக்கல்ல எமது கட்சியில் போட்டியிடும் சக நபருக்கு வாக்க ளிக்கப்படக்கூடாது என்று நம்மவர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டதையும் நான் அறிவேன். “அவருக்கு வாக்களிக்க வேண்டாம் இவருக்கு வாக்களிக்க வேண்டாம்” எனப் பலர் கூறியிருந்தனர். அந்த விடயம் இப்போது முடிந்துவிட்டது. நீங்கள் எந்தளவு விருப்பு வாக்கைப் பெற்றாலும் அதனை நாம் கவனத்திற்கொள்ளப் போவதில்லை.
உங்கள் நடவடிக்கை, அர்ப்பணிப்பு, கட்சிக்குள்ள அர்ப்பணிப்பு மிக முக்கியமானதாகும். நீங்கள் எந்தக் கட்சியின் அங்கத்தவரானாலும் நீங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே உள்Zர்கள். கட்சிக்கான கெளரவம் முக்கியமானது.
சமாதானமாக இணைந்து செயற்படுவது முக்கியமாகும். உங்கள் மாகாணத்தில் உள்ள ஏனைய அரசியல்வாதிகளுடன் அமைச்சர்கள் மற்றும் மாகாண, பிரதேச சபை உறுப்பினர்களாக இருக்கலாம். அவர்களுடன் ஐக்கியமாகச் செயற்படுவது உங்கள் கடமை.
அனைவரும் மக்களுக்கு சேவை செய்வதற்கென்றே தேர்ந்தெடுக்கப்பட் டுள்Zர்கள் என்பதை மறக்கக்கூடாது. மக்கள் தேவைகள், எதிர்பார்ப்புக்களைக் கவனத்திற்கொண்டு செயற்படுங்கள். மக்களின் முன்னேற்றத்திற்காகச் செயற்படுங்கள். இவ்வாறு செயற்பட்டால் எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை, எந்த தேர்தலிலும் வெற்றி பெறமுடியும்.
நாம் வெற்றிபெறும் ஒவ்வொரு முறையும் ஏதோ ‘ஜில் மாட்’ செய்கிறோம் என்றும் இன்னும் ஏதேதோ சொல்கிறார்கள். எவர் எப்படி கூறினாலும் நாம் உண்மையான வெற்றியைப் பெற்றுள்ளோம். இது உங்கள் வெற்றி ஊவா மக்களின் வெற்றி, இதனைக் கருத்திற்கொண்டு மக்கள் சேவைக்கு உங்களை அர்ப்பணி யுங்கள் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar