இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்காக முன்னெடுக் கப்படும் திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக பொறிமுறையொன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவொன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் நல்லிணக்கம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்கள் இது தொடர்பில் பல்வேறு செயற் திட்டங்களை முன்னெடுக்கிறது. இவை தேசிய மற்றும் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை எற்படுத்தும் நோக்குடன் செயற்படுத்தப்படும் சகல திட்டங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கு ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சர் களடங்கிய அமைச்சரவை உப குழு அமைக்கும் ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இது தவிர நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படுவதை கண்காணிக்கும் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான குழுவின் நடவடிக்கைக ளுக்கு உதவுவதற்காக அமைச்சின் செய லாளர்கள் உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, பொதுபல சேனாவின் அண்மைய மாநாட்டு தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சகலரையும் சமமாக நடத்துவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். மேற்படி அமைப்பின் நடவடிக்கை தொடர்பில் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
Post a Comment