BREAKING NEWS

மஹிந்த ராஜபக்'வை மீண்டும் ஜனாதிபதியாகுமாறு மக்கள் அழைக்க வேண்டும்

செய்நன்றியுள்ள சமூகத்தின் கடமை இதுவென்கிறார் அமைச்சர் ஜோன் செனவிரத்ன
மூன்றாம் முறை தேர்தலில் நிற்பதா, இல்லையா என்ற பிரச்சினையை விடுத்து செய்நன்றியுள்ள சமூகம் என்ற வகையில் நாட்டு மக்கள் மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா, இல்லையா என்பதை விடுத்து அவரை மீள ஜனாதிபதியாகுமாறு நாட்டு மக்கள் அழைப்பு விடுப்பது சிறந்ததாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அழிவடைந்தி ருந்த நாட்டை மீளக்கட்டி யெழுப்பி நிம்மதியான வாழ்க்கைக்கான சூழலைப் பெற்றுக்கொடுத்தமைக்காகவும் அபிவிருத்தியை நாட்டில் தொடர்ந்து முன்னெடுக்கவும் என நன்றியுள்ள சமூகம் என்றவகையில் அவரை மீள ஜனாதிபதியாகும்படி மக்கள் அழைப்புவிடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் கஹங்கம பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சேவா பியச கட்டிடத்தை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்று கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்ததாவது:-மஹிந்த சிந்தனை செயற்திட்டம் மூலம் கிராமிய பிரதேச வறுமை நிலையிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
‘திவிநெகும’, ‘மக நெகும’, ‘நெனபியச’ போன்ற திட்டங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.
மக்களுக்கு அரச சேவையை மிகவும் சமீபமாக்குவதற்காக நடைமுறைப் படுத்தப்படுவதே ‘சேவா பியச” திட்டத்தின் நோக்கமாகும்.
நாட்டில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றங்களுக்குக் காரணகர்த்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. கிராமத்தில் பிறந்தவர் என்பதால் கிராமிய மக்களை நேசிக்கின்றவர் என்ற வகையில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார். வடக்கு மக்களின் ஆதரவையும் அவர் வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் யாழ்.தேவி ரயில் சேவை ஆரம்பிப்பு வைபவம் இதனை எமக்கு உணர்த்தியது.
ஜனாதிபதித் தேர்தலொன்றை எதிர்கொண்டுள்ள நாம் இதுபற்றிச் சிந்திக்க வேண்டியது முக்கியமா கும் என்றும் அவர் மேலும் தெரிவித் தார்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar