(அஷ்ரப் ஏ. சமத்)
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் ஆதரிப்பது பற்றி இன்னும் எந்தவொரு தீர்க்கமானதொரு முடிபையும் மேற்கொள்ளவில்லையெனவும் விஷமத்தனமான பிரச்சாரங்களை நம்பி வீனாக அலட்டிக் கொள்ள
வேண்டாம். எனவும் முஸ்லீம் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் சமுக நடத்தையில் அக்கறை கொண்டவர்களுக்கும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதித் தலைவரும் மாகாணசபை அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமத்தின் தெரிவித்துள்ளார்.
மக்காவில் உம்றா கடமையை முடித்துவிட்டு நேற்று நாடு திரும்பிய அவர் ஜனாதிபதித் தேர்தலையும் முஸ்லீம் காங்கிரசின் தலைமையையும் சம்பந்தப்படுத்தி வெளிவந்திருக்கும் உண்மைக்கு புறம்பான ஜோடிக்கப்பட்ட கதைகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
கட்சிக்குள்ளேயே உள்ள ஒரு சிலரும், கட்சிக்கு எதிரான சிலரும் தலைவர் ரவுப்ஹக்கீமை வீழ்த்துவதற்காக மேற்கொண்டுவரும் சதியின் ஒரு வடிவமே இது என அவர் தெரிவித்தார்.
முஸ்லீம் காங்கிரஸ் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வாக்குக் கொடுக்க வில்லை. முஸ்லீம் மக்களின் அபிலாசைகளை ப+ர்த்திசெய்ய முன்வரும் வேற்பாளர் ஒருவருக்கே ஆதரவு வழங்கப்படும். தனது இந்த நிலைப்பாட்டில் இம்மியளவும் விலகாது முஸ்லீம் சமுதாயத்தை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது. முஸ்லீம் காங்கிரசின் அடிமட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரை நன்கு பரீசீலிக்கப்பட்ட பின்னரே சமுதயாத்திற்கு பொருத்தமான முடிபொன்றை எடுக்கும்.
எனவே கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம். தேர்தல் காலங்களில் மு.கா. தலைவர் ஹக்கீமை குறிவைத்து இவ்வாறன திரைப்படங்கள் வெளிவருவது வழமையே. அந்த வகையில் முஸ்லீம் வாக்காளர்களாகிய நீங்கள் இந்தப்படத்தை பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடுங்கள். இதில் நிஜம் அல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள். என ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

Post a Comment