மத்தளவில் ‘பெஸ்ட் லைப்’ நிறுவனத்தினால் ‘பெஸ்ட் லைப் எக்கோ ரிகோர்ட்’ என்னும் பதனம விடுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
உண்மையில் இவர்கள் ‘மஹிந்தட்ட பே’ என்பதற்கு பதிலாக ‘மஹிந்தட்ட பய’ என்றே சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும். ஜனாதிபதியின் வெற்றி மீதுள்ள பயத்தினாலேயே இவ்வாறான பிரசாரங்களை அவர்கள் மேற்கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.
வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளை கட்டுப்படுத்தும் உபாய மார்க்கமாகவே இந்த மூன்றாம் உலக நாடுகளை கையாள்கின்றன எனவும் அவர் சுட்டிக் காட்டினார். இலங்கையில் 1975இல் அணிசேரா நாடுகளின் மாநாடு நடந்தபோது அப்போதைய பிரதமராகவிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அணிசேரா நாடுகளுக்கான வங்கியொன்றை ஸ்தாபிப்பதற்காக கோரிக்கையொன்றை முன்வைத்தார். எனினும் அந்த கோரிக்கை அணிசேரா நாடுகளின் அமைப்பிலிருந்த பலம் பொருந்திய நாடுகளால் நிராகரிக்கப்பட்டது.
அன்று இலங்கை பிரதமரின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அணிசேரா நாடுகளின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கென பலம் பொருந்திய வங்கியொன்று உருவாக்கப்பட்டி ருக்கும். உலக வங்கி, ஐ.எம்.எப். ஆகியன தோற்றம் பெற்றிருக்காது. தமது பணபலத்தை கொண்டு ஏனைய நாடுகள் மீது அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நாடுகள் அன்று அந்த வங்கியை நிலைநிறுத்துவதற்காக கோரிக்கையை நிராகரித்திருந்தன எனவும் அமைச்சர் கூறினார்.
Post a Comment