BREAKING NEWS

நிலையான வீடமைப்புக் கொள்கை

(அஷ்ரப் ஏ சமத்)
இந்த நாட்டில் ஒரு நிலையான வீடமைப்புக் கொள்கையொன்றின் அவசியத்;தை உணர்ந்து வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு  தேசிய வீடமைப்புக் கொள்கையை நேற்று(20)ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் கூட்ட மண்டபத்தில் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டது.



இந் நிகழ்வு அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில்  நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு  பொருளாதர அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அஜித் நவாட் கப்ரால் மற்றும் சகல அமைச்சிக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஏற்கனவே உலக குடியிருப்பு தினத்தில் வைத்து வீடமைப்பு கொள்கைப் பிரகடனம்  ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டில் நிலையான வீடு இல்லாது (123,370) 1இலட்சத்து 23ஆயிரத்து முன்நூற்றி எழுபது குடும்பங்கள் உள்ளனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar