BREAKING NEWS

15க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்த ஆசாமி அகப்பட்டார்…


15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஷேக் முகமது என்ற கல்யாண மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி ஸ்டார் தியேட்டர் அருகே டீக்கடை நடத்தி வருபவர் கலிபுல்லா. இவர், இன்று திருச்சி, பாலக்கரை காவல்நிலையத்தில் தனது பேத்தியை ஷேக் முகமது என்பவர் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக புகார் மனு அளித்தார். இதையடுத்து, காவல்துறையினர், திருச்சி ஆழ்வார்த்தோப்பை சேர்ந்த ஷேக் முகமதுவை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், ஷேக் முகமது இதேபோல் பதினைந்துக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.
மேலும், இவர் பல பெண்களை மயக்கி ஆபாசப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த சில வருடங்களுக்கு முன் திருச்சி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், போதை பொருள் கடத்திய வழக்கில் ஷேக் முகமது சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar