BREAKING NEWS

கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்

* 5 பேரின் சடலங்களே மீட்பு
* ஊடகங்கள் முரண்பாடான தகவல்கள் வெளியீடு
கொஸ்லந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 38 பேர் மாத்திரமே காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் 5 பேரின் சடலங்கள் மாத்திரமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

உள்நாட்டு, சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பில் முரண்பாடான தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஒரு சில ஊடகங்களில் காணாமல் போனோர் எண்ணிக்கை 300 என்றும் சில ஊடகங்களில் 150 என்றும் வெளிவந்துள்ளன.
அத்துடன் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 14 என்றும் 19 என்றும் முரண்பாடான தகவல்களை சில ஊடகங்கள் தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு எமக் குண்டு. இது தொடர்பாக நாம் உண்மையான தகவல்களை வழங்க வேண்டியுள்ளது. குறிப்பாக கொஸ்லந்த மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தினால் பலர் காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பாக நாம் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர்க ளுடனும், கிராம சேவகர் உத்தி யோகத் தர்களுடன் கலந்துரை யாடினோம். அவர்கள் தெரிவித்த தகவலின் படி மொத்தமாக 38 பேர் மாத்திரமே காணாமல் போயு ள்ளனர்.
அத்துடன் இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் 3 பெண்களும் 6 வயது சிறுவனும் மேலும் ஒரு சடலமும் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களில் ஐவரின் சடலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
எனவே, பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சரியான தகவல்களை வெளியிடுமாறும் மக்களிடையே வீணான சந்தேகங்களை ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, கொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவில் காணாமல் போனோர் தொடர்பாக தொடர்ந்து மீட்புப் பணியில் பொலிஸாரும், இராணு வத்தினரும் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar