ஹஜ் கடமையை வறியவர்களும் நிறைவேற்றக்கூடிய வகையில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒருவர் ஒரு முறையாவது ஹஜ் கடமையை நிறைவேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் திருகோணமலை முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா
முஸ்லிம் மகாவித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழாவில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இது தொடர்பாக முஸ்லிம் அமைச்சர் களும், சர்வமதத் தலைவர்களும் தெரிவித்த கருத்துக்களை கீழே தருகின்றோம்.
ஹஜ் கடமையை வறிய மக்களும் நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங் களையும், ஏற்பாடுகளையும் நடைமுறைப் படுத்துவதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியதென்று திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் தெரிவித்தார்.
முஸ்லிம்களாக பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆசை உண்டு. அத்துடன் இஸ்லாத்தின் ஐந்தாவதும் இறுதியுமான ஹஜ் கடமையை முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவரும் குறிப்பாக வசதிபடைத்த தனவந்தர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.
இந்நிலையில் ஜனாதிபதி அவர்களினால் தற்போது வசதியற்றவர்களும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஹஜ் கடமையை ஏற்கனவே நிறைவேற்றியவர்களுக்கு பதிலாக ஹஜ் கடமையை முதல் தடவையாக நிறைவேற்ற இருப்போருக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
குறிப்பாக ஐந்து முதல் ஆறு இலட்சம் ரூபா செலவு செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள ஹாஜிகளுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக விமான டிக்கட்டுகள், தங்குமிட வசதிகள், அத்தியாவசியத் தேவைகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியுமாக இருக்கும் என்றார்.
ஹசன் மெளலானா
கடமையாக்கப்பட்டவர்கள் கூட ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை காணப்படும் இவ்வேளையில், ஜனாதிபதி அவர்களின் முற்போக்கான சிந்தனையினால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் முஸ்லிம் மத விவகாரங்களுக்கு பொறுப்பானவரும், கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவு ஆலோசகருமான கலாநிதி அஷ்ஷெய்க் ஹசன் மெளலானா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ் கடமையை வசதிபடைத்தவர்கள் நிறைவேற்ற வேண்டுமென்ற சூழ்நிலை இருக்கும் போது, இலங்கையில் இதற்கான புதிய திட்டங்கள் வகுக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.
சவூதி அரேபிய அரசாங்கம் குறிப்பிட்ட ஹஜ் கோட்டாவையே இலங்கைக்கு வழங்குகின்றது.
இந்நிலையில் வசதிபடைத்தவர்கள் கூட ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெளத்த மதத்தை பின்பற்றும் பக்தராக இருந்த போதிலும், இந்நாட்டுத் தலைவர் என்ற வகையில் சகல மதங்களினதும் கடமைகளை நிறைவேற் றுவதற்கு பொறுப்பானவர் என்பதை உணர்ந்து முஸ்லிம்களின் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு எடுத்துள்ள செயற்பாடானது வரவேற் கத்தக்கது.
ஜனாதிபதியினால் முன்னெடுக் கப்பட்டுள்ள இத்திட்டம் வெற்றிய டையவதற்கு இருகரம் ஏந்தி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.- thinakaran
Post a Comment