BREAKING NEWS

மு.கா வை எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் புறக்கணிப்பார்கள்!


Hakem-பிறவ்ஸ் முஹம்மட்-
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கப்போகிறோம் என்பதை மக்களுக்கு அறிவிக்காமல் இழுத்தடித்துக்கொண்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் இன்று நடைபெறும் உயர்பீடக் கூட்டத்தில் மஹிந்தவை ஆதரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியிலுள்ள 90 வீதமானோர் மைத்திரியை ஆதரிப்பதற்கு முன்வந்துள்ளனர். இருப்பினும் தனது பைல்கள் வெளியில் வராமல் பாதுகாத்துக்கொள்வதற்காக ஹக்கீம் அரசாங்கத்தைவிட்டு விலகுவதற்கு யோசித்து வருகிறார். பல தடவைகள் நடைபெற்ற கூட்டங்களில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையிலேயே முடிவடைந்துள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவளித்தாலும் சேதாரம் ஏற்படும். எனவே, சேதாரம் குறைந்த பக்கமே கட்சி ஆதரவளிக்குமென ரவூப் ஹக்கீம் கூறிவந்தார். அவர் சேதாரம்… சேதாரம்… என்று கூறிவந்தது அரசாங்கத்தலிருந்து விலகினால் தன்னுடைய பைல்கள் மேலே வரும் என்பதையே என்பது இன்று மக்களுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது.
முஸ்லிம் காங்கிரஸில் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதற்கு பெருமளவானோரும் அக்கட்சியில் உள்ளபோதும், கட்சித் தலைவர் உள்ளிட்ட ஒருசிலர் தங்களது சுயநலத்துக்காக மஹிந்தவை ஆதரவளிக்கவுள்ளனர். இதன்மூலம் அவர்களுடைய பைல்கள் மேலலே வராமல் இருப்பதுடன், சுகபோகங்களும் வழங்கப்படும்.
மேற்படி காரணங்களினால், மு.கா. மைத்திரியுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் நடாத்தாமல், மஹிந்தவுடனும், கோத்தாபாயவுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக நேற்று கோத்தபாயவுடன் முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாண முஸ்லிம்களை மையப்படுத்திய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு பெற்றுத்தருவாக கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு காலமும் பெற்றுக்கொடுக்கப்படாத இத்தீர்வு மரணத்தறுவாயில் வழங்கப்படுவதாக கூறப்படுவதற்கான காரணம், மஹிந்தவை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பதற்கு காரணம் ஒன்றை மக்களிடம் முன்வைக்க வேண்டும் என்பதற்காவே.
தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளிவீசும் அரசாங்கத்தை நம்பி, மஹிந்தவின் தோளில் சாய்ந்துள்ள பொதுபல சேனாவுடன் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் கைகோர்க்க முன்வந்திருப்பது இஸ்ரவேலுக்கு உதவுவதற்கு ஒப்பானது.
சுயநலத்துக்காக முஸ்லிம்களின் இருப்புகளை கேள்விக்குறியாக்கும் தலைமைகளுடன் இவர்கள் கைகோர்த்திருப்பது இஸ்லாத்தை அழிப்பதற்கு சமமானது.
இன்றிரவு நடைபெறும் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டால் அது சமூகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய தியாகமாகும். அவ்வாறு இல்லாமல் மஹிந்தவின் சால்வையில் தொங்கிக்கொண்டிருந்தால் முஸ்லிம் வாக்காளர்கள் இவர்களை எதிர்வரும் தேர்தல்களில் புறக்கணிப்பார்கள் என்பது வெள்ளிடைமலை.
Metromirrr

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar