ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க தேசிய காங்கிரஸ் முன்வந்துள்ளதையிட்டு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு பாராட்டுத் தெரிவித்ததோடு தமது ஆதரவினையும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவிய கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இரு தசாப்தங்களாக முரண்பட்டிருந்த சமூகங்களை ஒற்றுமைப்படுத்தி அபிவிருத்திப்பாதையை முன்கொண்டு செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் ஊடாக என்றென்றும் எங்கள் ஆதர விருக்கும்.
நாட்டை சீர்குலைப்பதற்கு வெளிநாட்டு சக்திகளுடன் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் மீண்டுமொரு யுத்தத்தை உருவாக்க நாம் இடமளியோம் எனவும் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Thinakaran
Post a Comment