BREAKING NEWS

உலமா கட்சிக்கும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவக்குமிடையிலான விரிவான பேச்சு வார்த்தை

ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக உலமா கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவக்குமிடையிலான விரிவான பேச்சு வார்த்தை பத்தரமுல்லையில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது முஸ்லிம் சமூகம் எதிர்
நோக்கும் பிரச்சனைகள் தேவைகள் பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் விரிவாக முன்வைக்கப்பட்டது.  இதனை நன்கு செவிமடுத்த அமைச்சர் அவர்கள் உடனடியாக அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் இணைப்பாளர் சரத் கீர்த்திரத்னவுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அமைச்சர் பெசிலுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யும்படி பணித்தார். 

    இன்னும் சில நாட்களில் அமைச்சர் பெசில் மற்றும் ஜனாதிபதியுடன் பேசிய பின் உலமா கட்சி தனது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. உலமா கட்சியின் சார்பில் அதன் தலைவருடன், உப தலைவர் மௌலவி ஜெய்னுலாப்தீன், இணைச்செயலாளரும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான இஸ்ஸதீனும் கலந்து கொண்டனர்.



Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar