அஸ்ரப் ஏ சமத்
இந்த நாட்டில் உள்ள சிறுபாண்மை மக்களின் பாரியதொரு பௌhத்த இனவாத கட்சிதான் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளது. அக்கட்சி அந்தரங்கமாக ஒரு உடன்படிக்கையையும் கைச்சாத்தியுள்ளது. இந்த இனவாதியான கட்சி மைத்திரிபால ரணில், சந்திரிக்காவுடன் இருக்கும் ;வரை முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் எவ்வித விமோசனமும் கிடைக்காது.
மேற்கண்டவாறு நேற்று இரவு அமைச்சர் விமல் வீரவன்ச மருதாணை சங்கராஜமாவத்தையில் உள்ள தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை 825 இலட்சம் ருபா செலவில் நவீனமயப்படுத்தி புனர்த்தாபணம் செய்து மக்களிடம் கையளிக்கும் ;வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் வைபவத்தில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியும் கலந்து சிறப்பித்தார்.
அங்கு அமைச்சர் விமல் தொடர்ந்து உரையாற்றும்போது
இந்த பௌத்த இனவாதக் கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இருக்கும்வரை சிறுபாண்மையினருக்கு எதிராக எந்த வரப்பிரதசங்களை கொடுக்காமல் தடுத்துக்கொண்டிருந்த கட்சி.
ஆகவே முஸ்லீம்களாகிய நீங்கள் சற்று சிந்தியுங்கள். உண்மையில் ஜனவரி 8ஆம் திகதி வெற்றிபெருவது மஹிந்த ராஜபக்சதான் ஆகவே நீங்களும் அவருக்கு வாக்களித்து மஹிந்த ராசபக்சவின் பங்குதாரர்களாகிவிடுங்கள். கடந்த 30 ஆண்டுகளில் இவ்வாறகாக அழகிய நிலையில் இந்த வீடமைப்புத்திட்டத்தினை அழகுபடுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இவ்வாறாக இதுவரை 35 வீடுஅமைப்புத்திட்டங்கள் அழகுபடுத்தி நவீனமயப்படுத்திட்த்திற்கு ஜனாதிபதி மஹிந்தவே இவ்வாறு பாரிய நிதியை எனக்கு வழங்கினார். கடந்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரணில் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் இவ்வாறானதொரு அபிவிருத்திகளை அவர்களால் செய்ய முடிந்ததா ?
ரணில் ஆணைச் சின்னத்தில வந்திருந்தால் இம்முறை ஜனாதிபதித் தோதலில் ஒரு பாரிய போட்டியாகவும் சவாலாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர் கடந்தமுறை சரத் பொண்சேகாவை பழிக் காடக்கினார். இம்முறை சந்திரிக்கா பண்டாரநாயக்காவைப் பயன்படுத்தி மைத்திரிபாலசிறிசேனாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். மைத்திரிபால சிரிசோனவே ஒரு நிலையான கொள்கையில்லாதவர், தலைமைத்துவத்துக்கு பொறுத்தமற்றவர், எல்லாவற்றுக்கும் தலையாட்டுபவர்.
சந்திரிக்காவோ அரசில் உள்ள 45 பாராளுமன்ற உறுப்பிணரைக் மஹிந்தவுடன் கழற்றி எடுக்கின்றேன். ஜ.தே.கட்சியில் உள்ள 43யையும் சேர்த்து அரசைக்கொண்டுபோகலாம். என தப்புக் கணக்கு போட்டுவிட்டார். ஆனால் மஹிந்த அரசில் மிகவும் தலையிடியாக இருந்த 8 பேர்தான் போகியிருக்கிறார்கள்.
வீதியில் செல்கின்ற ஒருவர் மைத்திரிபாலசேனாவுடன் ஒர் ஒப்பந்தம் கைச்சாத்திட வாங்க என்றாலும் மைத்திரி கைச்சாத்திடுவார். அவரைக்கொண்டு ரணிலும், சந்திரிக்காவும் பேய் ஆட்டம் ஆட்டுகின்றனர். இப்படியான ஒருவரிடம் மக்கள் நாட்டைக் கையளிப்பது ?


Post a Comment