அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டத்திற்கிணங்க சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்கும் செயற்திட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொலன்னறுவையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.நேற்றைய தினம் 3000 பேருக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டதுடன் அமைச்சர் ஹரிசன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இந்த கொடுப்பனவுகளை உரியவர்களுக்கு கையளித்தார்.
இதற்கு முன்னர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் மாற்றும் நடவடிக்கைகளுக்காகவே பணம் வழங்கப்பட்டு வந்தது. அரசாங்கத்தின் புதிய தீர்மானத்திற்கமைய சிறுநீரக நோயாளர்கள் அனைவருக்கும் மாதாந்தம் 3000 ரூபா என்ற ரீதியில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த நிகழ்வு நேற்று பொலன்னறுவை நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
Post a Comment