(பழுலுல்லாஹ் பர்ஹான்)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் நடாத்திய ஊடவியலாளர் மகாநாட்டில்; என் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.
கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ச்சியாக வெறுமனே அப்பட்டமான பொய்களை ஊழல் ஊழல் என்று சொல்லி வந்தவர்கள் நான் ஊழல் இருந்தால் நிரூபியுங்கள் என்ற அடிப்படையில் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்தியுள்ளனர்.
ஆகவே இலங்கை அரசாங்கத்தினால் ஒரு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று அவர்களின் ஆட்சியில் இருப்பதாகவும் மிகச் சிறந்த நிபுணர்கள் அந்த குழுவில் உள்ளதாகவும் உடனடியாக நீங்கள் முன்வைத்த அந்த இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளையும் இரண்டு மூன்று தினங்களுக்குள் அல்லது மிக குறுகிய நாட்களுக்குள் உத்தியோகபூர்வமான முறையில் அம் முன்னணி தங்களிடம் இருக்கின்ற உரிய ஆவணங்களோடும் ,ஆதாரங்களோடும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அத்தோடு தான் உடனடியாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சென்று அது தொடர்பான பதில் அறிக்கைகளை கொடுத்து மிக விரைவில் இது தொடர்பில் உண்மை எதுவும் இருக்கின்றதா ? என்பதை கண்டறிந்து அது தொடர்பான தீர்ப்பை அவர்களிடம் வழங்குமாறு கேட்க இருப்பதாகவும் கூறினார்.
ஆகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் என் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அதில் ஓன்று காத்தான்குடி நகர சபை தொடர்பாக முன்வைத்துள்ளார்கள் அதற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.
இரண்டு குவைட் சிட்டி சம்மந்தமாகவும் செலிங்கோ புறபிட் சியாரிங் சம்மந்தமாகவும் முன்வைத்துள்ளார்கள் குறித்த இரு விடயங்கள் தொடர்பில் தங்களிடம் என்ன ஊழல் செய்திருக்கின்றேன் ,எவ்வாறான முறையில் அரசியலில் துஷ்பிரயோகம் செய்திருக்கின்றேன் என்று தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக ஒப்படைக்குமாறும் அப்படி அவர்கள் மூன்று அல்லது நான்கு தினங்களுக்குள் ஒப்படைக்காத பட்சத்தில் அது எந்தவித ஆதாரமுமற்ற வெறுமனே என் மீது முழுமையான பொய்யை ,அபாண்டமான குற்றத்தை சுமத்தியதற்காக அவர்கள் முன்வைத்த இவ் விடயத்தை எந்தவித ஆதாரமற்ற பொய்யாக நான் பிரகடனம் செய்ய வேண்டி ஏற்படும்.
அவர்கள் சம்மந்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தங்களிடம் இருக்கின்ற ஆதாரங்களை உடனடியாக கொண்டு சென்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறும் அங்கு நிபுணர்கள் இருப்பதாகவும் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருப்பதாகவும் இன்று அரசாங்கம் ஜனாதிபதி அவர்களால் அதனை உடனடியாக விசாரிப்பதற்கான விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் இரண்டு மூன்று தினங்களுக்குள் உத்தியோகபூர்வமான முறையில் அந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தங்களிடம் இருக்கின்ற உரிய ஆதாரங்களை நேரடியாக ஒப்படைக்க வேண்டுமெனவும் அது தொடர்பில் நான் உடனடியாக அவர்களை சந்தித்து மிக விரைவாக விசாரித்து அது தொடர்பில் இருக்கின்ற உண்மை நிலையை அளிக்குமாறு கேட்க இருக்கின்றேன் எனவும் அதனை அவர்கள் மூன்று அல்லது நான்கு தினங்களுக்குள் ஒப்படைக்கா விட்டால் இவர்கள் சுமத்துகின்ற அப்பட்டமான பொய் என்பதையும் அபாண்டமான பொய் என்பதையும் நான் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டி ஏற்படும் என்பதை இச் சந்தர்ப்பத்தில் கேட்க விரும்புகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

Post a Comment