BREAKING NEWS

தமிழ்ச்சங்கத்தில் இலக்கியக்களம் நிகழ்ச்சி

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெள்ளிதோறும் நடாத்தப்படும் இலக்கியக்களம் நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. திருமதி வரதா யோகநாதன் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

சட்டத்தரணி திருமதி இராஜகுலேந்திரா இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கியதுடன் சிறப்பு உரைஞராக கலந்துகொண்ட வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஈழத்துப் பெண் கவிஞர்களின் குரல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின்  இறுதியில் கொழுந்து ஆசிரியர் அந்தினி ஜீவா, கலைஞர் கலைச்செல்வன், சட்டத்தரணி இராஜகுலேந்திரா ஆகியோர்

கருத்துரைகளை வழங்கினார்கள். இறுதியில் தமிழ்ச்சங்கம் சார்பாக சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களால் உரைஞர் ரிம்ஸா முஹம்மதுக்கு நூல்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது பிடித்த படங்களைக் காண்க.

படமும் தகவலும் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar