
மத்திய ஆப்ரிக்க குடியரசில் கடத்தப்பட்டுள்ள 42 முஸ்லிம்கள் ..
ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ள சம கால முக்கியத்துவமான செய்தி ஐ எஸ் .. கொலை , பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் , கடத்தல்களை அரங்கேற்றுவதாக தொடர்சியான செய்தி வெளியீடுகள்.. இதே ஊடகத்தில் சத்தமில்லாமல் மறைத்த ஒரு சம்பவம் மத்திய ஆப்ரிக்க குடியரசில் (CAR) முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கிறிஸ்துவ தீவிராவாத குழுக்களால அரங்கேற்றப்பட்டு வரும் கூட்டு படுகொலைகள் மற்றும் கடத்தல் மற்றும் பாலியல் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட சம்பவங்கள் ஆகும்..
கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல ஆயிரம் முஸ்லிம்கள் கூட்டுப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் .. பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்..
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 42 முஸ்லிம்களை கடத்தியுள்ளது இந்த தீவிரவாத குழு.. கடத்தப்பட்டவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள்..கடத்தப்பட்ட பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளது..
முஸ்லிம் தீவிரவாதிகள் வெறிச்செயல் என்று கூறும் எந்த ஒரு ஊடகமும் இந்த செய்திகளை சிறு செய்தியாக கூடவெளியிடவில்லை இல்லை.. படுகொலைக்கு ஆளாக்கும் தீவிரவாத குழுக்களை அவர்களின் மதத்துடன் தொடர்பு படுத்தி செய்தியும் வெளியிடவில்லை..
கத்தியை வைத்து முகத்தை மூடி தலை வெட்டினால் அவனுக்கு பெயர் முஸ்லிம் தீவிரவாதி என்ற இடைவிடாத பிரட்சாரம்.. அதே நேரத்தில் மத்திய ஆப்ரிக்க குடியரசில் அதே கத்தியை வைத்து முகத்தை மூடாமல் முஸ்லிம்களை கொன்று குவித்தால் அந்த செய்தி அப்படியே மூடி மறைக்கப்படும் இது தான் கேடுகெட்ட ஊடகங்கள் செய்தி வெளியிடும் கேடுகெட்ட இரட்டை நிலை..
Post a Comment