BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அலி சாகிர் மௌலானா கள்ளன் , மோசடிக்காரன் என நகர சபை உறுப்பினரான ஆசாத் கூச்சல்

ஏறாவூர் நகர சபையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் நகர சபையின் தவிசாளரும் தற்போதைய கிழக்கு மாகான சபை உறுப்பினருமான அலி சாகிர் மௌலானா ஐ சபையோர் முன்னிலையில் கள்ளன் , மோசடிக்காரன் என நகர சபையின் உறுப்பினரான ஆசாத் அழைத்து கூச்சல் இட்டதாகவும் இதனால் ஆத்திரம் உற்ற மௌலானாவின் ஆதரவாளர்கள் அவருடன் முரண்பட்டதாகவும் இதனால் இதனால் நகர சபை வளாகத்துக்குள் பெரும் அமளி துமளி ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் தலையிட்டு நிலைமைகளை சுமுக நிலைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்து .
அதனை அடுத்து தான் சிலரால் தாக்கப்பட்டதாக ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ஆசாத் செய்த பொலிஸ் முறைப்பாட்டை அடுத்து ஏறாவூர் நகர சபையில் கடமையாற்றும் ஊழியர் பைசல் என்பவரை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது -
மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளுக்குள் அலி சாகிர் மௌலானா மீது பெரும்பான்மையானோருக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருப்பதுடன் அவர் ஒரு மோசடி , களவுகளில் ஈடுபடாத நேர்மையானவர் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது , அதே நேரத்தில் மௌலானா இன் ஆதரவாளர்களை பொறுத்த வரை அவரிடம் இருந்து பணம் , சலுகைகளை எதிர்பார்த்து ஆதரவளிப்பதில்லை அவரின் நேர்மை நட்பன்புகளுககாகவே அவருக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் பரவலாக தெரிவித்து வரும் நிலையில் ஆசாத் அவர்கள் மௌலானாவை ஒரு கள்ளன் - கொள்ளைக்காரன் என்று ஒரு பொது நிகழ்வின் போது பகிரங்கமாக குறிப்பிட்டமையாலேயே அவரின் தீவிர ஆதரவாளர்கள் குழு ஏறாவூர் நகர சபைக்குள் ஆசாத் துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது -
இதே வேளை நகர சபைக்குள் வைத்து தான் குழு ஒன்றினால் தாக்கப்பட்டதாக உறுப்பினர் ஆசாத் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் ஏறாவூர் வைத்தியசாலை இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன ,
அத்துடன் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நகர சபை ஊழியர் பைசல் தெரிவிக்கையில் , தான் யாருக்கும் சார்பாக நடந்து கொள்ளவில்லை என்றும் நகர சபை வளாகத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் சமரசம் செய்ய முற்பட்டதாகவும் , எதற்காக ஆசாத் என்னை குற்றம் சாட்டுகிறார் என்று தெரியவில்லை - யாரையோ பழி வாங்குவதட்காகவும் தனிப்பட்ட குரோதத்திட்காகவும் நான் அவரை தாக்கியதாக பொய்யான குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்று தெரிவித்தார் ,
இதேவேளை , கைது செய்யப்பட்டுள்ள பைசல் ஐ இன்னும் சற்று நேரத்தில் ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான ஏற்பாடுகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
ஒரு உறுப்பினரால் அலி சாஹிர் மௌலானா குற்றம் சாட்டப்பட்டால் அது உண்மையா இல்லையா என்பதற்கு அவர் பதில் தருவதே முறை. அதனை விடுத்து அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் தொடுப்பது ஜனநாயக விரோதம். இது பற்றிய உண்மையை அல்ஜஸீறா லங்கா எதிர் பார்க்கிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar