தற்பொழுது ஏற்பட்டுள்ள முக்கிய நிலைமைகள் குறித்து நேரில் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க எம்.பி தெரிவித்தார்.
இருவரும் பொதுவான இடமொன்றில் சந்தித்து பேசவிருப் பதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இது தொடர்பாக நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசியபோது, பொது இடமொன்றில் சந்திக்க உடன்பாடு தெரிவித்தார். குமார வெல்கம எம்.பி அடங்கலான ஏழு பேர் அடங்கிய ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்த சந்திப்பிற்கான ஒழுங்குகளை செய்து வருகிறது.
இருவரும் ஆராயவேண்டிய விடயங்கள் குறித்த யோசனையொன்றை தயாரித்து வருகிறது. எதிர்காலத் தேர்தல், தற்பொழுதுள்ள அரசியல் நிலைமைகள் உட்பட பல விடயங்கள் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment