முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமராக பதவி வகிப்பதினால் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரவேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
இந்த நோக்கத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதோடு, அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்காவிட்டாலும் தனிப்பட்ட முறையில் எம்மிடம் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் தமக்கு எவ்வித தனிப்பட்ட குரோதங்களும் இல்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதையோ, பிரதமராக பதவி வகிப்பதையோ தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Post a Comment