உலகில் நீண்ட நேரம் நோன்பு பிடிக்கும் நாடு டென்மார்க், குறைந்த கால நாடு ஆர்ஜன்டீனா
இம்முறை ரமழானில் டென்மார்க் நாட்டு முஸ்லிம் களே நீண்ட நேரம் நோன்பு நோற்பதாக நோன்பு நோற்கும் காலம் குறித்த சர்வதேச வரைபடத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி டென்மார்க் முஸ்லிம்கள் சராசரியாக நாளொன்றுக்கு 21 மணிநேரம் நோன்பு பிடிக்கின்றனர்.
இதில் ஆர்ஜன்டீன முஸ்லிம்களே மிகக் குறைந்த காலம் நோன்பு நோற்கின்றனர். அவர்கள் 9 மணிநேரம் மற்றும் 30 நிமிடங்கள் நோன்பு நோற்கின்றனர்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் புனித ரமழான் நோன்பு நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. இதில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் அடிப்படையில் உலகெங்கும் நோன்பு பிடிக்கும் காலம் வேறுபடுகிறது.
கர்ப்பமுற்றிராத, பிரயாணத்தில் ஈடுபடாத உடல் சுகாதாரம் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் நோன்பு நோற்பது கடமையாகும். இவ்வாறு நோன்பு நோற்பவர்கள் குறித்த ஒரு மாதத்தில் சூரிய உதயத்தில் இருந்து அஸ்தமனம் வரை உண்ண, குடிக்க, புகைக்க மற்றும் உடலுறவு கொள்ள தடுக்கப்படுகின் றனர். இந்நிலையில் உலகெங்கும் நோன்பு பிடிக்குத் காலம் குறித்த வரைபடம் ஒன்றை நெதர்லாந்து வானொலி வெளியிட்டுள்ளது. இதில் நீண்ட நேரம் நோன்பு நோற்கும் நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து, சுவீடன் மற்றும் நோர்வே உள்ளடங்குகின்றன. இந்த நாடுகளில் சுமார் 20 மணி நேரங்களாக நோன்பு நோற் கும் காலம் அமைந்திருக்கும்.
நெதர்லாந்து மற்றும் பெல்ஜpயமில் நோன்பு காலம் 18 மணி நேரம் 30 நிமிடங்கள் என்பதோடு ஸ்பெயினில் 17 மணி 30 நிமிடங்களும், இங்கிலாந்து மற்றும் nஜர்மனியில் 16 மணி 30 நிமிடங்களுமாகும். அமெரி க்கா, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் 16 மணிநேரம் நோன்பு நீடிக்கும்.
மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 11 முதல் 16 மணி நேரம் வரை நோன்பு காலம் நீடிக் கிறது. எனினும் மத்திய கிழக்கில் ரமழான் நோன்பு காலம் கடந்த 33 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான காலமாக அமைந்துள்ளது.
மிகக் குறைந்த காலம் நோன்பு பிடிக்கும் நாடுகளுள் அவுஸ்திரேலியா 10 மணிநேரமும் தென்னாபிரிக்கா 10 மணி நேரம் 30 நிமிடங்களும் பிரேஸில் 11 மணிநேர மும் மெக்சிகோவில் 13 மணி 20 நிடங்களும் நோன்புக் காலம் நீடிக்கும்.

Post a Comment