BREAKING NEWS

தம்புள்ள பள்ளி உடைக்கப்படும்; ஆபத்து. ஜனாதிபதி அனுமதியா?

-
தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மாயின் புதி­தாக பள்­ளி­வா­சலை நிர்­மா­ணிக்க அர­சினால் கையேற்­கப்­பட்­டுள்ள டாக்டர் புத்­த­தா­சவின் காணியில் இடம் ஒதுக்­கப்­ப­ட­வேண்டும் என்று கோரி 59 பேர் கையொப்­ப­மிட்டு ஜனா­தி­ப­திக்கு அனுப்­பிய கடி­தத்­துக்கு அவர் பதில் அனுப்பி வைத்­துள்ளார்.
தம்­புள்­ளையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்­க­ளவர் இணைந்து இந்தக் கடி­தத்தை ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைத்­தி­ருந்­தனர்.
நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் தம்­புள்­ளை­யி­லி­ருந்து பலாத்­கா­ர­மாக வெளி­யேற்­றப்­பட்­டுள்ள 74 பேருக்கு வீடுகள் கட்டிக் கொள்­வ­தற்­காக காணிகள் வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் தம்­புள்­ளையில் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்ட கோயி­லுக்கும் காணி வழங்க வேண்­டு­மெ­னவும் குறிப்­பிட்ட கடி­தத்தில் கோரப்­பட்­டி­ருந்­தது.
கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கும் படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நகர அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லா­ளரை வேண்­டி­யுள்ளார்.
அக்­க­டி­தத்தின் பிர­தியும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் சார்பில் ஜனா­தி­ப­திக்கு கடி­தத்தை அனுப்­பி­வைத்த தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம்.சலீம்­தீ­னுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது.
தம்­புள்ளை நகர அபி­வி­ருத்­திக்கு முஸ்­லிம்கள் தடை­யாக இருக்­க­வி­ரும்­ப­வில்லை எனவும் அபி­வி­ருத்­திக்­காக தம்­புள்ளை பள்­ளி­வாசல் அகற்­றப்­ப­டு­மாயின் அரசாங்கத்தினால் கையேற்கப்பட்டுள்ள டாக்டர் புத்ததாசவின் காணியில் நிலம் வழங்கப்படவேண்டுமெனவும் பள்ளிவாசல் நிர்வாகமும் ஏற்கனவே வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar