BREAKING NEWS

மலையக மக்கள் இனியும் கூலியாக வாழமுடியாது- அமைச்சா் மனோ கனேசன்

(அஸ்ரப் ஏ சமத்)
 




மலையக மக்கள் இனியும் கூலியாக வாழமுடியாது, இந்த நாட்டில் வடக்கு தமிழ் மக்ள், கிழக்கு வாழ் முஸ்லீம்கள்  தெற்கு வாழ் பௌத்த மக்கள் போன்று மலையக மக்களும் தலைநிமிா்ந்து வாழ வேண்டும்.  
அதற்காகவே மலையகத்  தமிழ் முற்போக்கு முன்னனியை அமைத்தோம்.  இக் கட்சியை  அமைத்து  3 மாதங்களுக்குள் நாம் இரண்டு கபினட் அமைச்சா்கள் மேலும் 4 பாராளுமன்ற உறுப்பிணா்களை பெற்று இருக்கின்றோம்.  இன்னும் சகல மலையக மாவட்டங்கள் வாழ் மக்களையும் ஒரே கூரையின் கீழ்  கொண்டுவருவோம். என அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா்

கொழும்பு ஜித்துப்பிட்டி சினி சினிமா மண்டபத்தில் கொழும்பு வாழ் மலையக இளைஞா்கள் ஏற்பாடு செய்த பாராட்டு வைபத்தில் கலந்து கொண்டே அமைச்சா் மனோ கனேசன் மேற்கண்டாவறு தெரிவித்தாா். இந் நிகழ்வு நேற்று (5) இரவு நடைபெற்றது.  மேலும் மலையக அமைச்சா் திகாம்பரம், பதுளை பாராளுமன்ற உறுப்பிணா் சுரேஸ் வடிவேல்,  பாராளுமன்ற உறுப்பிணா்  திலகராஜ் மற்றும் மாகாண சபை உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.
அங்கு தொடா்ந்து உரையாற்றிய  அமைச்சா் மனோ -



கடந்த காலங்களில் 2 தசாப்தங்களாக கபினட்டிலும் பாராளுமன்றத்தில் உளள் கதிரைகளை சூடாக்கிக் கொண்டு சிலா் இருந்தாா்கள் நாம் பாராளுமன்றம் சென்றது சும்மா தேங்காய் திருவப்  போவதில்லை. மலையக மக்களது சகல பிரச்சினைகளையும்  பாராளுமன்றத்திலும் கபிணட்டிலும் சர்வதேசத்திலும் இனி உரைக்கப்போகின்றது. அதனை நீங்கள் கேட்கப் போகின்றீா்கள். 

 எமது மக்களின் பிரச்சினைகளை நாம்  போராடிப் பெறல் வேண்டும். 
எமது மக்களின் தனியான மலையக பல்கலைக்கழகம், லயண் வீட்டுத்திட்டம் ஒழித்து அனைவருக்கும் சொந்தமாக வீடு காணி பெறப்படல் வேண்டும்.
கல்வியில் நாம் மறுமலா்ச்சி பெற்று நாம் முன்னேற வேண்டும். நுவரேலியாவிலும் அம்பேத்தலை நகர சபையிற்குட்பட்ட பிரதேசத்தில் 4 இலட்சம் மலைய மக்களுக்கு இரண்டே இரண்டு நகர சபை ஆனால் கிழக்கில் வடக்கில் 15ஆயிரம் மக்களுக்க ஒரு பிரதேச சபை இருக்கின்றது.
நுவரேலியாவிலும் அம்பேத்தலையிலும் 15 பிரதேச சபை உறுவாக்கப் போகின்றோம். அதில் இருந்தும் மலையக இளைஞா்கள் நமது பிரதேச சபையில் இருந்து அரசியல் தலைவா்களாக உருவாக வேண்டும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar