-எம்.வை.அமீர், யூ.கே.காலிதீன்-
கடந்த காலங்களில் சாய்ந்தமருதுக்கு பல்வேறு சேவைகளை வழங்கிவந்த பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் இப்போது பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. தற்போது இந்நிறுவனத்தை புதிய நிருவாகம் பாரமேடுத்துள்ளது. இவர்கள் இந்நிறுவனத்தை மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கக்கூடியவாறு முன்கொண்டுசெல்ல வேண்டும் என்று, அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதிய நிருவாகத்தினர் பொறுப்புக்களை அதிரடியாய் பாரமெடுக்கும் நிகழ்வு 2016-07-17 ஆம் திகதி கூட்டுறவுச்சங்கத்தின் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜெமீல்,
சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் செயற்பாடுகள் கடந்த பலவருடங்களாக பல்வேறு காரணங்களினால் ஸ்தம்பித நிலையில் காணப்பட்டிருந்தது. நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் கடந்த 2016-07-16 ஆம் திகதியன்று எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் புதிய நிருவாகம் குறித்த சங்கத்தை பெறுப்பேற்றுள்ளது. கடந்தகாலத்தில் குறிப்பிட்ட குழுவினரால் இந்நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டு நமது மக்களின் சொத்துக்கள் பாழடிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தை பொறுப்பேற்றுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவினாலான இந்த குழுவினர் இச்சங்கத்தை செயற்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும். அதற்கான செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நமது இந்த சங்கத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளேன். முதற்கட்டமாக அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் காகிதாதிகள் விற்பனை நிலையத்தின் கிளை ஒன்றை இங்கு நிறுவுவதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளேன். அதேபோன்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் எங்களது தலைவர் அமைச்சர் றிசாத் பதியூதீனுக்கு கீழ் வருவதால் அவரதது உதவிகளையும் இந்த சங்கத்துக்கு பெற்றுத்தர முயற்சிபேன் என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் சொத்துக்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் புதிய நிருவாகத்தினர் திரட்டியேடுக்க வேண்டும் அத்துடன் சங்கத்தின் கடந்தகால வரவு செலவுகள் தொடர்பிலும் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும். சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருக்க வேண்டும் அத்துடன் இந்நிறுவனத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு புதிய நிருவாகத்தினர் இந்த பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் சொத்துக்களை இனங்கண்டு அவற்றில் செயற்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களை தயார்செய்து அவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின் இறுதியில் கூட்டுறவுச்சங்கத்தின் அலுவலக கட்டிடங்களையும் குழுவினர் சுற்றிப்பார்வையிட்டனர்.
Post a Comment