BREAKING NEWS

நுளம்புக் கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள பாடசாலை சீருடையில் மாற்றம்

நுளம்புக் கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள பாடசாலை சீருடையில் மாற்றம்செய்யுமாறு அதிபர்களுக்குஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான ஆலோசனைகள்அடங்கிய ஆவணங்கள் கல்விஅமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கை கால்களை மறைக்கும்வகையில் நீளக் காற்சட்டைகை நீளசேர்ட் உள்ளிட்ட ஆடைகளை பாடசாலைமாணவர்கள் அணிந்து செல்லஅனுமதிக்கப்படும்.

சீருடையின் நிறத்தை பாடசாலைஅதிபர்கள் நிர்ணயம் செய்ய முடியும்.

இதுவரையில் பதிவான டெங்குநோயாளிகளில் 30 வீதமானவர்கள்பாடசாலை மாணவ மாணவியர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

தற்போது பயன்படுத்தப்படும்சீருடைகளை விடவும் வேறு ஆடைகளைஅணிவதன் மூலம் நுளம்புக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கைவெளியிட்டுள்ளது.


இதேவேளை டெங்குவை ஒழிப்பதனைவிடுத்து இவ்வாறு சீருடையில் மாற்றம்செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்லஎன கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar